News

இராசனவியலில் உயர் புள்ளிகளை பெற்றுக்கொள்ள கல்வியற் கல்லுரி விரிவுரையாளரின் ஆலோசனைகள்.

க.பொ.த (உ/த) இரசாயனவியல் பாடமதிப்பீட்டின்போது மாணவர்கள் உயர் புள்ளிகளைபெற்றுக் கொள்வதற்குகவனத்தில் எடுக்கப்படவேண்டிய விடயங்கள்


க.பொ.த (உ/த)ப் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாண வர்களில், கணித, விஞ்ஞானப்பிரிவு மாணவர்களிற்கு பொதுவான பாடங்களில் ஒன்றான இரசாயனவியல் (Chemistry) பாடத்திற்கு தோற்ற இருக்கின்ற மாணவர்கள் இந்த இரசாயனவியல் பாடத்தில் அதிக புள்ளிகளைப் பெறும் பொருட்டு மாணவர்களின் நன்மையைக் கருதி எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். க.பொ.த (உ/த) வகுப்பு மாணவர்களிற்கு இரசாயனவி யல் பாடத்தை கடந்த இருபத்தைந்து வருடங்களிற்கு மேலாக கற்பித்த அனுபவங்கள், பத்து வருடங்களிற்கும் மேலாக தொடர்ச்சியாக இரசாயனவியல் பாடத்தில் தேசிய ரீதியான பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டில் பங்குபற்றி அதிக மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து அனுபவங்கள் கடந்த சில வருடங்களாக இரசாயனவி யல் பாட தேசிய ரீதியான பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டின் மேலதிக பிரதம பரீட்சகராக (Additional Chief Examiner) கடமையாற்றியதில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள், இரசாயனவியல் பாடத்தின் யாழ் வலய வளவாளராக இருந்த போது பெற்ற அனுபவங்கள், யாழ்ப்பாணத்திலும், வெளி மாவட்டங்களிலும் இரசாயன யல் பாடக் கருத்தரங்குகளை நடாத்தி, பங்கேற்றதினால் பெற்ற அனுபவங்கள் பரீட்சைகளின் மேற்பார்வையாளராக கடமையாற்றிய அனுபவங்கள் என்பவற்றினுாடாக மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தின் அடிப்படையில் அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராக கடமையாற்றும் நான் இக் கட்டுரையை எழுதுகின்றேன்.
இரசாயனவியல் பாடத்தின் தேசிய ரீதியிலான பரீட்சையின் வினாத்தாள் பற்றி அறிந்திருப்பீர்கள், எனினும் இதுபற்றி சுருக்கமாக நோக்கும்போது இந்த வினாத்தாளானது பகுதி 1, பகுதி 11 என்ற இரு வினாத்தாள்களையுடையது. பகுதி 1ஆனது 50 பல்தேர்வு வினாக்களைக் கொண்டது.
இது இரண்டு மணித்தியாலங்களுக்குள் விடையளித்தல் வேண்டும். ஐந்து விடைகளில் சரியான அல்லது மிகச்சரியான விடையின் இலக்கத்தின் மீது புள்ளடி T அடையாளமிட்டு விடையளிக்கப்படும்.
பகுதி II ஆனது அமைப்புக் கட்டுரை வினாக்கள் A (Structured Questions) என்றும் கட்டுரை வினாக்கள் B,C (Essay Questions) என்றும் இரண்டு வகைப்பட்ட T வினா அமைப்புக்களைக் கொண்டமைந்தது. இந்த A,B.C மூன்றிற்கும் மூன்று மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கும். இங்கு அமைப்புக் கட்டுரை வினாக்களுக்கு ஒரு மணித்தியாலமும், கட்டுரை வினாக்களுக்கு + இரண்டு மணித்தியாலங்களுமாக (1+2)என மூன்று மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. பகுதி 1 பகுதி II என்பன ஒரே நாளில் இல்லாது தனித்தனித் தினங்களில் நடைபெறும். விடையளிக்கும் நுட்பங்களும், எதிர்பார்க்கப்படும் பிரதான விடயங்களும் இங்கே பகுதி 1, பகுதி II என்பவைபற்றி தனித்தனியாக நோக்கப்படுகின்றன.
பகுதி III நோக்கும்போது (மூன்று மணித்தியாலங்கள்) இதில் அமைப்புக் கட்டுரை (A) வகையில் 4 வினாக்கள் உள்ளன. இந்த 4 வினாக்களிற்கும் வினாத்தாளில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் விடை எழுதவேண்டியிருக்கும். 1-4 வரையான இந்த 4 வினாக்களும் கட்டாயமான வினாக்களாகும்.
இதனுடன் இணைந்து கட்டுரை வினாக்களில் B,C என்ற இரண்டு பகுதிகள் உள்ளன. பகுதி டீயில் மூன்று வினாக்க ளும் (5, 6, 7) (யில் (8, 9,10) மூன்று வினாக்களும் என்றவாறு எல்லாமாக 6 வினாக்கள் காணப்படும். இங்கே B யில் ஏதாவது இரண்டு வினாக்களிற்கும், ( யில் ஏதாவது இரண்டு வினாக்களிற்கும் என்ற முறையில் எல்லாமாக 4 வினாக்களிற்கு விடை எழுதவேண்டியிருக்கும். இங்கே அமைப்புக்கட்டுரை A, கட்டுரை B,C ஆகிய பகுதிகளுக்கு விடையளிக்கும்போது மாணவர்களே + நீங்கள் பின்வரும் விடயங்களில் மிக வும் முக்கியமான கவனம் எடுத்தல் வேண்டும் என்பதை நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள். அவையாவன 1. அலகுகளுடன் விடையில் பிரதியிடுதல் (units) 2. அலகுகளுடன் விடையளித்தல். 3. பௌதிக நிலைகளை (physical states)ஐக் குறித்தல். 4.இரசாயனச் சமன்பாடுகளை சமப்படுத்தி எழுதுதல். (balanced chemical equation) 5. ஒட்சியேற்ற எண்க ளைக் (oxidation number) குறிக்கும்போது பொருத்தமான +/- என்ற குறியீடுகளைக் குறித்தல். போன்ற பிரதான விடயங்கள் இங்கே தனித்தனியாக ஆராயப்பட உள்ளன. 1. அலகுகளுடன் பிரதியிடுதல், அலகுகளுடன் விடையளித்தல்.
அன்பான மாணவர்களே (அடிப்படை இரசாயனவியல், வெப்ப இரசாயனவி யல், வாயுக்கள், பௌதீக இரசாயன யலின் பல பகுதிகள் இவை யாவற்றிலும் விடையளிக்கும் சந்தர்ப்பங்களில் அலகுகள் (units) பற்றிய கூடிய கவனம் எடுத்தல் வேண்டும். )

சிலஉதாரணங்களைக்கவனிப்போமானால் x 1. 4g NaOH ஆனது நீரில் கரைத்து கரைசலின் கனவளவு 250cm3 ஆக்கப்பட்டது. எனின் இக் கரைசலின் அமைப்பு moldm-3 ல் தருக என்ற ஒரு மிகவும் எளிய வினாவிற்கு விடை எழுதும் இரண்டு முறைகளைக் கருதும் போது

முறை 1 NaOH bơi mol = 4/40..................... (3) =0.1. ................. (3) கரைசலின் கனவளவு = 250/1000 அமைப்பு 0.1 1/4 ......................(3) விடை = 0.4| -.............. (3) முறை II NaOH இன் mol கணித்தல் = 4g/40gmol-1..........
(3+1) =1/10 mol =0.1mol . .............(3+1) கரைசலின் கனவளவு =250/1000dm3 = 1/4 dm3
.......... (3+1) அமைப்பு, செறிவு = மூல்/கனவளவு ---- (3) =0.1mol/1/4 dm3 .................... (3+1) விடை = 0.4 mol dm-3................. (3+1)
முறை 1ன் படி விடையளிக்கும் போது 15 புள்ளிகள் பெறப்படுவதையும், முறை 11 ன் படி அதே வினாவிற்கு விடையளிக்கும் போது 23 புள்ளிகள் பெறப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்த அவதானிப்பின்படி, படி முறை 1 ல் தனித்தனியாக மும்மூன்று புள்ளிகள் வழங்கப்பட்டிருப்பதையும் முறை ||ன்படி அந்த மும்மூன்று புள்ளிகளுடன் அடைப்புக்குறிக்குள் (3+1), (3+1)......... என்றவாறு புள்ளிகள் வழங்கப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இரசாயனவியல் புள்ளித்திட்டங்களை
கவனித்தால் புள்ளிகள் இப்படியாக (3+1), (2+1), (5+1, | (3+2) ........... என்றவாறான புள்ளிகள் குறித்திருப்பதை
அவதானிக்க முடியும். இந்த 1, 2 போன்று பின்னால் வழங்கப்பட்ட புள்ளிகள் அங்கே அலகுகளின் பிரயோகங்களிற்கே வழங்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகின்றது. மேலும் தேவையான சமன்பாட்டை எழுதுவதற்கும் புள்ளி வழங்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்க. வேறு ஒரு உதாரணத்தையும் நோக்குவோமாயின் வெப்ப இரசாயனவியலின் ஒரு பகு தியில் விடையளிக்கும் ஒரு சந்தர்ப்பத்தையும் இரண்டு முறைகளில் கருதும் போது, முறை 1ல் 500+ H = 415+319 (3) H=234 (3) | இதே சந்தர்ப்பத்தை முறை || ன் படி நோக்கும் போது முறை 11ல் 500kJmol-1 + H = 415 kJmol'' + 319 kJmol- (3+1) அல்லது 500 kJmol'' + H = (415+ 319) kJmol'' (3+1) H= 234 kJmol'' (3+1)
முறை 1ன் படி 6 புள்ளிகள் கிடைப்பதையும், முறை || ன் படி 8 புள்ளிகள் கிடைப்பதையும் அவதானிக்கலாம்.
இங்கே மேலதிக 2 புள்ளிகளில் 1 புள்ளி அலகுடன் பிரதியிட்டதற்கும், 1 புள்ளி அலகுடன் விடையை எழுதியதற்கும் வழங்கப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்க. எனவே, இப்படியான அலகுகள் தொடர்புடைய
வினாக்களிற்கு விடை எழுதும் போது மாணவர்கள் மிகவும் விழிப்பாக தொழிற்பட்டு அலகுகளுடன் பிரதி யிடவும், இறுதி விடையில் அலகு வரும் சந்தர்ப்பத்தில் விடை அலகுடன் எழுதுவதிலும் கூடிய கவனம் தேவை. இரசாயனவியல் புள்ளித்திட்டத்தை கவனிப்பீர்களாயின் இந்த அடைப்புக்குறிகளினுள் புள்ளிகள் குறித்துள்ள விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். அலகுகளுடன் பிரதியிடுவது என்பது வரிக்குவரி ஒவ்வொரு வரியிலும் பிரதியிட வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுவதில்லை. இங்கே முதலாவது வரியில் பிரதியிட்டால் போதுமானது. 2. பௌதிக நிலைகளைக் குறித்தல். இரசாயனவியல் புள்ளித்திட்டத்தில் பௌதிக நிலை (Physical States)களின் பயன்பாடும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. பௌதிக நிலைகளைத் தேவையான இடங்களில் சரியாக பயன்படுத்தும் போது பெறப்படும் அதிக புள்ளிகளையும், பௌதிக நிலைகளைக் குறிக்காமல் விடுவதனால் வீணாக புள்ளிகள் இழக்கப்படுவதையும் பின்வரும் உதாரணங்கள் மூலம் விளங்கிக்கொள்ள முடியும். Eg:- 1, MgCl,ன் சாலக சக்தியை சமன்பாட்டில் தருக என்ற வினாவின் விடையை நோக்கும் போது விடை 1, Mg + + 2Cl'- MgCl, (0 புள்ளி ) விடை II, Mg* (g) + 2CI- (g)- MgCl, (s)
(5 புள்ளி ) இங்கே 1 ம் சந்தர்ப்பத்திற்குப் புள்ளிகளே வழங்கப்படாத நிலையையும், 11 ம் சந்தர்ப்பத்தில் 5 புள்ளிகள் வழங்கப்பட்ட நிலையையும் அவதானிக்கலாம்.
இது புள்ளித்திட்டத்தில் (5/0) என்றவாறு குறிக்கப்பட்டிருக்கும். அதாவது சரியான சமன்பாடு பௌதிக நிலைகளுடன் எழுதியிருந்தால் 5 புள்ளிகள் வழங்கப்படும் என்பதும், சமன்பாட்டில் பௌதிக நி'ை லகள் குறிக்கப்படாதிருப்பின் 0 புள்ளிகள் வழங்கப்படும் என்பதையே இந்த (5/0) என்ற குறியீடு விளக்குகின்றது. Eg:- 2, நியம H மின்வாயின் குறியீட்டை எழுதுக என்ற ஒரு வினாவின் விடையில்
H2(g)/ H+ (1 moldm-3, 25°C, 1 atm), Pt(s) என்ற வாறு எழுதும் போது 10 புள்ளிகள் வழங்கிய சந்தர்ப்பங்களும் உள்ளன. இங்கு பௌதிக நிலை, நியம நிபந்தனைகள் என் பனவும் இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
Eg:-3, Cu ன் அயன்கள் கதோட்டில் இறக்கமடைதல் (படிவடைதல்) சமன்பாட்டை எழுதுக என்ற எளிய வினா வின் விடையை நோக்கும் போது Cur*+2e_Cu ........... (0 புள்ளி ) Cu*(aq) + 2e Cu(s) ....... (4புள்ளி ) இங்கே (aq) கரைசல், (s) திண்மம் என்ற பௌதிக நி-ை லகளைக் குறிக்காது விட்டதனால் 0 புள்ளியும், அந்த (aq), (s) போன்ற பௌதிக நிலைகளை உரிய இடங்களில் குறித்து அதே சமன்பாட்டை சரியாக எழுதியத னால் 4 புள்ளிகளும் வழங்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
Eg:- 4, Ethanol (எதனோல்)ன் நிறை தகன சமன்பாட்டை எழுதுக என்ற ஒரு வினாவின் விடைகளை நோக்கும் போது விடை ஐ, CH,CH,OH+ 30,-2C0,+3H,O (0 புள்ளி ) விடை II CH, CH,OH(I) + 30, (g) - 2CO,(g) + 3H,0(1) (5 புள்ளி ) |
விடை 1, சமன்பாடு சமப்படுத்தப்பட்டுள்ளது எனினும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.
விடை II, ற்கு 5 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. விடை டன் சமப்படுத்தப்பட்ட அதே சமன்பாட்டில், பௌதிக நிலைகளும் குறித்து விடை II ல் எழுதப்பட்டிருப்பதால் அங்கே புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இவற்றை நோக்கும் போது பௌதிக நிலை குறித்து எழுதப்படுவதன் முக்கியத்துவம் அறியக் கூடியதாக உள்ளது. 3. சமப்படுத்திய சமன்பாடுகளை எழுதுதல் இரசாயனவியலில் சமப்படுத்திய சமன்பாட்டை எழுதுக என்ற வினா வின் விடையில் குறிப்பிட்ட சமன்பாடுகள் சமப்படுத்தி எழுதுதல் வேண்டும். இங்கே பிரதான கவனிப் யாதெனில் சமப்படுத்தி எழுதப்படும் சமன்பாடுகள் எளிய வடிவில் சமப்படுத்தப்பட்டவையாக இருத்தல் வேண்டும். குறித்த எண்களின் மடங்குகளாக சமப்படுத்தி எழுதுதல் கூடாது. உதாரணமாக N,(g) ம H,(g) ம் சேர்ந்து NH,(g) தோன்றும் சமன்பாட்டை கருதுவோம்.
விடை I N.(g) + 3 H,(g) - 2 NH,(g)
விடை II, 2N,(g) + 6 H.(g) - 4 NH,(g) இங்கே II ம் விடைக்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.
சமப்படுத்திய சமன்பாடுகள் பின்னங்கள் வடிவிலும் எழுதுதல் கூடாது. எனினும் வெப்ப இரசாயனவியலின் சில சமன்பாடுகளில் மட்டும் சமன்பாடானது பின்னமாக அ-ை மயும்.
அடுத்ததாக பகுதி 1 ற்குரிய விடையளிக்கும் முறைகளை அணுகும் போது
இங்கே 50 பல்தேர்வு வினாக்கள் வினாவப்படும் முழு-ை மயாக விடையளிக்கும் நேரம் 2 மணித்தியாலங்களாகும். (2011 ம் ஆண்டிற்கு முன்பு 60 பல்தேர்வு வினாக்களாக இருந்தன). இங்கே புள்ளடித்தாள் (Answer sheet) வழங்கப்படும். அதில் 1,2,3,4,5 என்பன இலக்கங்கள் ஒவ்வொரு வினாவிற்கும் ஒதுக்கப்பட்டிருக்கும். சரியான விடையின் இலக்கத்தின் மீது தெளிவான புள்ளடி (x) அடையாளம் வழங்கப்பட்ட அறிவுறுத்தலை வாசித்து அதன்படி குறித்தல் வேண்டும். இங்கே 1-30 வரையான வினாக்களிற்கு 5 விடைகள் தரப்பட்டிருக்கும், இவற்றில் சரியான, or மிக சரியான ஒரு விடையைத் தெரிவு செய்து அந்த விடைக்குரிய இலக்கத்தின் மீது (x) இடுதல் வேண்டும். அடுத்த 31 - 40 வரையான வினாக்கள் a,b,c,d வகை வினாக்களாக அமையும். இங்கும் சரியான விடைத்தெரிவு ஜந்து விடைகளில் ஒன்றாகவே அ-ை மயும். அதாவது (a,b=1, b,c=2, c,d=3,a,d=4 வேறு தெரிவு எனின் விடை 5) என்றவாறு விடை அமையும். மிகுதியான 41-50) வரையான வினாக்கள் கூற்று, காரணம் என்ற வினா அமைப்பாக இருக்கும். இங்கேயும் விடையளித்தலானது ஐந்தில் ஒரு விடை எண்ணாகவே அமையும் வினாத்தாளில் இதன் விடைத் தெரிவிற்கான அறிவுறுத்தல் தரப்பட்டிருக்கும்.

அன்பான மாணவர்களே இரசாயனவியல் பகுதி 1 வினாத்தாளை நோக்கும் போது 1ம் வினாவில் இருந்து இறுதி வினா வரையில் கடினத்தன்மை அதிகரிக்கும் போக்கில் வினாக்கள் அமைவது ,ல்லை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். (சில போட்டிப் பரீட்சை வினாத்தாள்களில் அவ்வாறு காணப்படுவதுண்டு
எனவே, மாணவர்களே நீங்கள் முதல் ஒரு சுற்றில் 1ம் வினாவில் இருந்து இறுதி வினா வரையில் விடையளிக்க முயற்சிக்கவும். ஏனெனில் இறுதிப்பகுதிகளிலும் கூட இலகுவான வினாக்கள் இரசாயனவியல் பாடத்தைப் பொறுத்தவரையில் வினாவப்படுவதுண்டு.
நன்றி:- அம்பலவாணர் லோகநாதன்
விரிவுரையாளர்
யாழ்ப்பாணம் தேசியற் கல்லூரி
கோப்பாய்

No comments

Lanka Education. Powered by Blogger.