News

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை

பகிடிவதை செயற்பாடுகளை பல்கலைக்கழக கட்டமைப்பிலிருந்து நீக்குவதற்கான பொறுப்பை உபவேந்தர்களுக்கு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். டயர் ஒன்றை உடம்பில் தள்ளிய நிலையில் காயங்குள்ளான பல்கலைக்கழக மாணவனை பார்வையிடுவதற்காக மாணவனின் வீட்டிற்கு சென்றபோது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இம்மாணவனின் சுகாதார மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான சகல வசதிகளும் அரசாங்கத்தினால் வழங்கப்படுமென அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். மிகவும் திறமையான ஒரு மாணவர் பகிடிவதையினால் இவ்வாறு பாதிப்படைந்துள்ளதாக அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். காயமடைந்த குறித்த மாணவர் 98 நாட்களாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முதலாவது சந்தேக நபர் எதிர்வரும் 29ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கைதுசெய்யப்பட்ட ஏனைய ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Lanka Education. Powered by Blogger.