News

ஐசாக் நியூட்டன்

ஐசக் நியூட்டன் (டிசம்பர் 251642 – மார்ச் 201727), ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும்அறிவியலாளரும்தத்துவஞானியும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவராகவும் இவர் இருந்தார்.
1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, Philosophiae Naturalis Principia Mathematica என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம், மரபார்ந்த விசையியல் (classical mechanics) என்னும் துறைக்கு வித்திட்டார். கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் என்பவருடன் சேர்ந்து, வகையீட்டு நுண்கணிதத் துறையின் உருவாக்கத்தில் பங்கு கொண்டார்.
நியூட்டனின் பிரின்சிப்பியாவிலேயே, பின்வந்த மூன்று நூற்றாண்டுகளில் பௌதீக அண்டம் தொடர்பான அறிவியலாளரின் நோக்கில் ஆதிக்கம் செலுத்திய, இயக்க விதிகள், பொது ஈர்ப்பு ஆகியவை உருவாக்கம் பெற்றன. இது புவியில் பொருட்களின் இயக்கங்களையும், அண்டவெளியில் உள்ள கோள்கள் முதலிய பொருட்களின் இயக்கங்களையும் ஒரே கோட்பாடுகளின் அடிப்படையில் விபரிக்கலாம் என விளக்கியது.
நியூட்டன் நடைமுறைச் சாத்தியமான முதலாவது தெறிப்புத் தொலைநோக்கியை உருவாக்கியதுடன், முப்பட்டைக் கண்ணாடி வெள்ளொளியைப் பிரித்துப் பல நிற ஒளிகளைக் கொண்ட நிறமாலையாகத் தரும் கவனிப்பை அடிப்படையாகக்கொண்டு நிறக் கோட்பாடு ஒன்றையும் உருவாக்கினார். ஒலியின் வேகம் குறித்தும் இவர் ஆய்வுகள் செய்தார். நுண்கணிதத்தில் இவரது ஆய்வுகளுக்குப் புறம்பாக, ஒரு கணிதவியலாளராக, அடுக்குத் தொடர் குறித்த ஆய்வுகளுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார்.




-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:-  Science, Lanka Educations, Learn Easy,  lkedu ,Isac Newton, Newton, History, Scientist, Research, influenced

No comments

Lanka Education. Powered by Blogger.