News

A/L - உயிரியல் - மனித கழித்தலங்கங்கள் - பாட விளக்கக் குறிப்புக்கள்


மனித கழித்தலங்கங்கள்

சிறுநீர்த் தொகுதி
சுவாசப்பைகள்



Image for post

தோல்



Image for post

மனிதனில் கழிவகற்றும் அங்கங்களாக சிறுநீர்த் தொகுதி, சுவாசப்பைகள், தோல் என்பன விலங்குகின்றன.

மனித சிறுநீர்த் தொகுதி




Image for post

சிறுநீரகம்

அவரை வித்து வடிவானது. நடுக்கோட்டுப் புறம் குழிவாகவும், பக்கக் கோட்டுப் புறம் குவிவாகவும் காணப்படும். அழுத்தமான மேற்பரப்பைக் கொண்டிருக்கும். வெண்நார்த் தொடுப்பிழையத்தினால் ஆக்கப்பட்ட சிறுநீரக உறையினால் போர்த்தப்பட்டது. சிறுநீரக உறைக்கு உட்புறம் இரண்டு பகுதிகள் காணப்படும்.
  1. மேற்பட்டை
  2. மையவிழையம்
சிறுநீரகமானது சிறுநீர் உற்பத்தியில் ஈடுபடும்.

சிறுநீரகங்களின் அமைவிடம்




Image for post

வயிற்றுக்குழியினுள் பிரிமென்றகட்டிற்கு கீழாக, முள்ளந்தண்டின் இரு அந்தங்களிலும் முதல் மூன்று நாரிக்குரிய முள்ளந்தண்டு மட்டங்களிடையே சுற்றுவிரிக்கு வெளிப்புறமாக வயிற்றுக்குழியின் பிற்புற சுவரிற்கண்மையில் வலது சிறுநீரகம் சற்று கீழாகவும், இடது சிறுநீரகம் சற்று மேலாகவும் காணப்படும். ஈரல் இருப்பதன் காரணமாக வலது சிறுநீரகம் சற்று கீழாகக் காணப்படும்.

மேற்பட்டை

சிறுநீரகத்தின் வெளிப்புறமாகக் காணப்படும். கலன் கோளங்களை கொண்டிருப்பதால் சிறுமணியுருவான தோற்றத்தை பெறும்.

மையவிழையம்

சிறுநீரகத்தின் உட்புறமாக காணப்படும். 8–19 வரையிலான சிறுநீரக கூம்பகங்கள் காணப்படும். இவை வரி போன்ற அமைப்புடையதாகும். கூம்பகங்களுக்கிடையில் காணப்படும் பகுதி சிறுநீரக நிரல்கள் எனப்படும். அவை மேற்பட்டை இழையங்களைக் கொண்டவை. கூம்பகத்தின் உச்சி சிறுநீரக இடுப்பை நோக்கியதாக காணப்படும். இது சிறுநீரக சிம்பியாக சிறப்படைந்திருக்கும். சிறுநீரக சிம்பி புனல் வடிவானதாகக் காணப்படும். சிறுநீரக சிம்பிகள் சிறிய புல்லிகளினூடு திறந்திருக்கும். சிறிய புல்லிகள் பெரிய புல்லிகளினூடு திறக்கும். பெரிய புல்லிகள் இணைந்து சிறுநீரக இடுப்பை உருவாக்கும். இது சிறுநீரக கானாக தொடரும்.

சிறுநீரக இடுப்பு

இது சிறுநீரக கானாக வெளிநோக்கி செல்லும். இப்பகுதியில் சிறுநீரக மேடு காணப்படும். இப்பகுதியினூடாக சிறுநீரக நாடி, சிறுநீரக நாளம், நிணநீர்க் கான்கள், நரம்புகள் என்பன செல்லும்.

சிறுநீரகங்களின் ஏனைய தொழில்கள்

  1. பிரசாரணச் சீராக்கம்
  2. குருதியில் பிரசாரண அமுக்கத்தை மாறாது பேணல்.
  3. குருதியின் கனவளவை மாறாது பேணல்.
  4. குருதியில் pH சீராக்கம்.
  5. ஓமோன்களை சுரத்தல்.
உதாரணம் :- Renin , Erythropoeitin
  1. குருதியில் இரசாயன கூறுகளை சீராக்கல்
  2. நைதரசன் கழிவகற்றல்



Image for post

சிறுநீர்க் கான்கள்

சிறுநீரை சிறு நீரகங்களிலிருந்து சிறுநீர்ப்பைக்கு கடத்தும்.

சிறுநீர்ப்பை

இது பேரிக்காய் உருவானது. விரிவடையக் கூடிய பையாகும். மீள்சக்தி கொண்டது. இதன் பின் புறமாக சிறுநீர்க்கான் திறக்கும். சிறுநீரை தற்காலிகமாக சேமிக்கும்.

சிறுநீர் வழி

சிறுநீர்ப் பையிலிருந்து (கழுத்து) உருவாகி சிறுநீரை வெளியேற்றும்.

சிறுநீர்ப் பையிலிருந்து (கழுத்து) உருவாகி சிறுநீரை வெளியேற்றும்.

முதுகுபுற பெருநாடியிலிருந்து எழும் சிறுநீரக நாடிகள் மூலம் சிறுநீரகங்களுக்கு குருதி விநியோகம் மேற்கொள்ளப்படும். வலது, இடது சிறுநீரக நாளங்கள் மூலம் சிறுநீரகத்திலிருந்து வரும் குருதி கீழ்ப்பெருநாளத்தினுள் சேர்க்கப்படும்.
Note:-
சிறுநீரகங்களின் தொழிற்பாட்டிற்குறியதும், கட்டமைப்பிற்குரியதுமான அடிப்படை அலகு சிறுநீரகத்தி ஆகும்.
ஒரு சிறுநீரகத்தில் ஏறத்தாழ 1 Million சிறுநீரகத்திகள் காணப்படும்.

சிறுநீரகத்தி

சிறுநீரகத்திகள் இரு வகைப்படும்.
  1. மேற்பட்டைக்குரிய சிறுநீரகத்திகள்
  2. மேற்பட்டை மையவிழையத்திற்குரிய சிறுநீரகத்திகள்

மேற்பட்டைக்குரிய சிறுநீரகத்திகள்

இவை மேற்பட்பையில் காணப்படும். ஒப்பீட்டளவில் குறுகிய என்லேயின் தடத்தை கொண்டவை.

மேற்பட்டை மையவிழையத்திற்குரிய சிறுநீரகத்திகள்

மேற்பட்டை, மையவிழைய சந்தியில் மையவிழையத்திற்கு அண்மையாகக் காணப்படும். நீண்ட என்லேயின் தடத்தை கொண்டவை. என்லேயின் தடம் மையவிழையத்தினுள் நீண்டு காணப்படும்.

சிறுநீரகத்தியின் பகுதிகள்




Image for post

கலன்கோலம்

சிறுநீரகத்தினுள் செல்லும் சிறுநீரக நாடி பலமுறை கிளைத்து உட்காவு புன்நாடியாக சிறுநீரகத்தினுள் பிரவேசிக்கும். இது மேலும் கிளைத்து மயிர்த்துளைக் குழாய் பிண்ணல்களை உருவாக்கும். உட்காவு புன்நாடியிலிருந்து உருவாகும் மயிர்த்துளைக் குழாய்களும், வெளிக்காவு புன்நாடிகளின் மயிர்த்துளைக் குழாய்களும் சேர்ந்து கலன்கோலம் உருவாகும்.

போமனின் உறை

இது கிண்ண வடிவானது. 200nm விட்டமுடையது மேற்பட்டை பகுதியில் காணப்படும். இரட்டை சுவருடையதாகும். வெளிச்சுவர் எளிய செதின் மேலணி கலங்களால் ஆனது. உட்சுவர் பாதக்குழியங்கள் எனும் அமைப்பை தோற்றுவிக்கும். இதில் துலக்கமான தனிக்கரு, விசேடித்த துளைகள், நீட்டங்கள் காணப்படும்.

அண்மை மடிந்த சிறுகுழாய் (PCT)

மடிந்த நீண்ட குழாய் வடிவ கட்டமைப்பானதாகும். போமனின் உறையை அடுத்து காணப்படும். இதன் கலங்கள் நெருக்கமாகக் காணப்படும். 60nm விட்டமுடையதாகும். எளிய கனவடிவ மேலணியால் ஆனது. கலங்கள் தூரிகை விளிம்பைக் கொண்டவை. உள்ளிடம் ஒடுங்கியதாக் காணப்படும்.

என்லேயின் தடம்

25–60nm விட்டமுடையது. மையவிழையப் பகுதியில் காணப்படும்.U (hair pin) வடிவமானது. நுண்ணிய குருதி கலங்களால் சூழப்பட்டது. மையவிழையப் பகுதியினுள் ஆழமாக இறங்கி பின் வளைந்து மேல் நோக்கி சென்று சேய்மை மடிந்த சிறுகுழாயுடன் இணையும். இதன் கலங்கள் ஐதாகக் காணப்படும்.
இது மூன்று பகுதிகளைக் கொண்டதாகும்.
  1. இறங்கு புயம்/இறங்கு தடம்
  • இது மெல்லிய சுவரினை கொண்டதாகும்.
  1. குறுக்குத்தடம்.
  • இது மெல்லிய சுவரினை கொண்டதாகும்.
  1. ஏறு தடம்
  • இது தடித்த சுவரினை கொண்டதாகும்.
என்லேயின் தடமானது Aves, Mammalia இல் மட்டும் காணப்படும். வனாந்தர முலையூட்டிகளில் 2 அல்லது 3 என்லேயின் தடங்கள் காணப்படுவதுடன் மிக நீளமாகக் காணப்படும்.

என்லேயின் தடத்தின் இறங்கு புயம்

அண்மை அந்தம் அகன்றதாகக் காணப்படும். இது எளிய வடிவ மேலணியால் ஆக்கப்பட்டது. சேய்மை அந்தம் ஒடுங்கியதாக் காணப்படும். இது எளிய செதின் மேலணியால் போர்த்தப்பட்டதாகும்.

என்லேயின் தடத்தின் ஏறு புயம்

இதன் ஆரம்பப் பகுதியானது நீளம் குறைந்ததாகவும் ஒடுங்கியதாகவும் காணப்படும். இது எளிய செதின் மேலணியால் ஆக்கப்பட்டிருக்கும் இதன் இறுதி பகுதியானது நீண்டதாகவும் அகன்றதாகவும் காணப்படும். இது எளிய கனவடிவ மேலணியால் போர்த்தப்பட்டிருக்கும்.

சேய்மை மடிந்த சிறுகுழாய் (DCT)

அண்மை மடிந்த சிறுகுழாயை விட நீளம் குறைந்த சுருண்ட குழாய் வடிவ அமைப்பானதாகும். 20–50nm விட்டமுடையதாகும். எளிய கனவடிவ மேலணியால் போர்த்தப்பட்டிருக்கும். இது சேர்க்கும் கலனினுள் திறக்கும்.

சேர்க்குங் கான் (CD)

பல சிறுநீரகத்திகள் ஒரு சேர்க்குங் கானினுள் திறக்கும். இது சிறுநீரக இடுப்பினுள் திறக்கும். இது எளிய கம்ப மேலணியால் போர்த்தப்பட்டிருக்கும்.
Note:- சேர்க்கும் சிறுகுழாயானது எளிய செவ்வகத் திண்ம மேலணியால் ஆனது.

சுற்றயல் சிறுகுழாய்க்குறிய மயிர்க் குழாய்கள்

அண்மை மடிந்த சிறுகுழாய், சேய்மை மடிந்த சிறுகுழாய் ஐ சூழ காணப்படும். குருதிக்கலன்களின் வலையமைப்பாக் காணப்படும். குருதியையும், உடலிற்கு பயனுள்ள பதார்த்தங்களையும் சுற்றோட்ட தொகுதிக்கு கொண்டுவரும்.

Vasarecta

கலன்கோளத்திலிருந்து வெளிக்காவு புன்நாடி வெளியேறி சேய்மை மடிந்த சிறுகுழாய், என்லேயின் தடத்தின் மீது மயிர்த்துளைக் குழாய் பிண்ணலை தோற்றுவிக்கும். மையவிழையத்தில் காணப்படும்.

மல்பீஜியன் உடல்/சிறுதுணிக்கை

கலன் கோளத்துடனான சிறுநீரகத்தி, சேர்க்குங் கான் என்பன ஒடுங்கி மல்பீஜியன் உடலை ஆக்கும்.
கலன் கோளம் + போமனின் உறை

கலன்கோள சந்தி உபகரணம்

உட்காவுப்புன் நாடி சேய்மை மடிந்த சிறுகுழாயை மருவும் போது இரு பகுதிக்குரிய இழையங்களும் ஒன்று சேர்ந்து உருவாகும். Renin, Erythropoeitin ஆகிய ஓமோன்களைச் சுரக்கும்.

சிறுநீரகங்களுக்கான குருதி விநியோகம்

முதுகுபுற பெருநாடியிலிருந்து எழும் சிறுநீரக நாடிகள் மூலம் சிறுநீரகங்களுக்கு குருதி விநியோகம் மேற்கொள்ளப்படும். வலது, இடது சிறுநீரக நாளங்கள் மூலம் சிறுநீரகத்திலிருந்து வரும் குருதி கீழ்ப் பெருநாளத்தினுள் சேர்க்கப்படும்.

சிறுநீராக்கம்

சிறுநீராக்கம் 3 படிகளினூடாக நடைபெறும்.
  1. அதிமேல் வடிகட்டல்
  2. தேர்வுக்குரிய மீள அகத்துறிஞ்சல்
  3. சுரத்தல்

அதிமேல் வடிகட்டல்

இச்செயற்பாடானது போமனின் உறையினுள் இடம்பெறும். உயர் அமுக்கத்தின் கீழ் வடிகட்டப்படும். கலன்கோளத்தினுள் மயிர்த்துளைக் குழாய்ச் சுவர், போமனின் உறையின் என்பவற்றினூடு வடித்தல் இடம்பெறும். மூலக்கூறுகள் பருமன் அடிப்படையில் மிகமெல்லிய வடியினூடாக வடிகட்டப்படும். கலன்கோளத்தின் சுவர் ஏனைய மயிர்த்துளைக் குழாய்களின் சுவரை விட 100 மடங்கு ஊடுபுகவிடும் திறன் கொண்டது.
68 000 இலும் குறைந்த சார்மூலக்கூற்றுத் திணிவுடைய பதார்த்தங்கள் வடிகட்டப்படும். வடிகட்டப்பட்ட பதார்த்தங்கள் போமனின் உறை இடைவெளியை அடையும். இது கலன்கோள வடிதிரவம் எனப்படும். கலன்கோள வடிதிரவத்தில் பின்வருவன காணப்படும்.
  1. Glucose
  2. Aminoacid
  3. யூரியா
  4. Hormons
  5. மருந்துகள்
  6. அயன்கள்
  7. Amines.
  8. கிரியற்றினின்ஈ/li>
  9. நீர்
குருதிக் கலங்களும், திரவவிழையப் புரதங்களும் வடிகட்டப்படமாட்டது. கலன்கோள வடிதிரவம் குருதித் திரவவிழையத்தை ஒத்தது. ஒரு நிமிடத்தில் ஏறத்தாழ 125 cm3 திரவம் வடிகட்டப்படும்.

தேர்வுக்குரிய மீள அகத்துறிஞ்சல்

கலன்கோள வடிதிரவத்திலுள்ள சில பதார்த்தங்கள் சிறுநீர்த்தாங்கு சிறுகுழாயிலிருந்து மயிர்த்துளைக் குழாய்ப் பின்னலினுள் மீள அகத்துறிஞ்சப்படும் செயற்பாடு தேர்வுக்குரிய மீள அகத்துறிஞ்சல் எனப்படும். ஏறத்தாற 124cm3 பதார்த்தங்கள் உயிர்ப்பான, உயிர்ப்பற்ற முறையில் அகத்துறிஞ்சப்படும். பின்வருமாறு ஒவ்வொரு பகுதிகளிலும் அகத்துறிஞ்சல் இடம்பெறும்.

01. அண்மை மடிந்த சிறுகுழாய்

உயிர்ப்பான முறையில்,
  1. Na+
  2. Glucose
  3. Aminoacid
என்பன அகத்துறிஞ்சப்படும். இவை 100% அகத்துறிஞ்சப்படும்.
மந்தமான முறையில்,
  1. Cl-
  2. HCO3-
  3. K+
  4. யூரியா
என்பன அகத்துறிஞ்சப்படும். யூரியா 55% அகத்துறிஞ்சப்படும். 80% ஆன நீர் கட்டுப்பட்ட முறையில் பிரசாரணத்தின் மூலம் அகத்துறிஞ்சப்படும். குருதியில் Glucose மட்டம் 180mg/100cm கனம் ஆகும் வரை அகத்துறிஞ்சப்படும். எனினும், இதை விட அதிகரிக்கும் போது சிறுநீரில் Glucose காணப்படும். இந்நிலை வெல்ல நீரிழிவு எனப்படும்.

02. என்லேயின் தடத்தின் இறங்கு புயம்

உயிர்ப்பான முறையில் Na+ உம், மந்தமான முறையில் பிரசாரணம் மூலம் 5% ஆன நீரும் அகத்துறிஞ்சப்படும்.

3.என்லேயின் தடத்தின் ஏறுபுயம்

உயிர்ப்பான முறையில் Na+உம், மந்தமான முறையில் Ci- உம் அகத்துறிஞ்சப்படும். இங்கு நீர் அகத்துறிஞ்சப்படுவதில்லை.
Note:- என்லேயின் தடத்தின் குறுக்குத்தடத்தில் உறிஞ்சல் இடம்பெறுவதில்லை. எனவே, குறுக்குத்தடத்தில் சிறுநீர் உச்ச செறிவில் காணப்படும்.

04. சேய்மை மடிந்த சிறுகுழாய்

உயிர்ப்பான முறையில் Na+ அகத்துறிஞ்சப்படும். Aldesterone இருப்பின் Na+ அகத்துறிஞ்சப்படல் கூட்டப்படும். யுனுர் இருப்பின் நீர் உயிர்ப்பான முறையில் அகத்துறிஞ்சப்படும்.
மந்தமான முறையில்,
  1. Cl-
  2. HCO3-
என்பன அகத்துறிஞ்சப்படும்.

05. சேர்க்குங்கான்

ADH இருப்பின் உயிர்ப்பான முறையில் நீர் அகத்துறிஞ்சப்படும்.
Note:- ADH இருப்பின் அதிபிரசாரணத்திற்குரிய சிறுநீர் உற்பத்தியாக்கப்படும்.

சுரத்தல்

குருதி மயிர்த்துளைக் குழாய்களிலிருந்து சில பொருட்கள் சிறுநீர் தாங்கு குழாயினுள் மீள விடுவிக்கப்படும் செயற்பாடு சுரத்தல் எனப்படும். பின்வருமாறு ஒவ்வொரு பகுதிகளிலும் சுரத்தல் இடம்பெறும்.

01. அண்மை மடிந்த சிறுகுழாய்

உயிர்ப்பான முறையில் H+, Creatinine என்பனவும், மந்தமான முறையில்NH4+ உம் சுரக்கப்படும்.

02. சேய்மை மடிந்த சிறுகுழாய்

உயிர்ப்பான முறையில் K+, H+, NH4+, யூரியா, சில மருந்து வகைகள்,Vitamine B, Creatinine என்பன சுரக்கப்படும்.
Note:- சேர்க்குங்கானில் H+சுரக்கப்படும்.

எதிரோட்டப் பொறிமுறை/ முரணோட்டப் பொறிமுறை

என்லேயின் தடம் எதிரோட்டப் பெருக்கி என்றும், Vasarecta எதிரோட்டப் பரிமாறி எனவும் அழைக்கப்படும். கலன்கோள வடிதிரவம் பயணிக்கும் திசைக்கு எதிர்த் திசையில் Vasarecta இல் குருதி செல்லும். இதன் மூலம் பின்வருவன ஏற்பட வாய்ப்பேற்படும்.
  1. பிரசாரண படித்திறன் ஏற்படுத்தப்படும்.
  2. மையவிழையத்தில் உயர் பிரசாரண கரைசல் உருவாகும்.

சிறுநீரின் கூறுகள்

95% நீரையும், 5% திண்மப்பதார்த்தங்களையும் உள்ளடக்கியதாகும். திண்மப் பதார்த்தங்கள் பிரதானமாக நைதரசன் கழிவுகளை உள்ளடக்கியதாகும். பின்வரும் அயன்களைக் கொண்டிருக்கும்.
Na+, K+, Cl-, Mg2+, Ca2+, PO43-, So42-
1500ml சிறுநீரில் காணப்படும் நைதரசன் கழிவுகள் பின்வருமாறு,
  • யூரியா 30g
  • கிரியற்றினின் 1–2g
  • அமோனியா 1–2g
  • யூரிக்கமிலம் 1g

சிறுநீர் வெளியேற்றப்படல்

சிறுநீரகத்தால் உருவாக்கப்பட்ட சிறுநீர் சிறுநீரக இடுப்பை அடைந்து சிறுநீரகக் கான்களினூடாக சிறுநீர்ப்பையை அடையும். இங்கு குறிப்பிட்ட நேரம் சிறுநீர் சேமிக்கப்பட்டு சிறுநீர் வழியினூடாக வெளியேற்றப்படும். சிறுநீர் வழியில் 2 இறுக்கித் தசைகள் காணப்படும்.
  1. உட்புற இறுக்கித் தசை
  2. வெளிப்புற இறுக்கித் தசை
உட்புற இறுக்கித் தசை தன்னாட்சி நரம்புத் தொகுதி மூலமும், வெளிப்புற இறுக்கித் தசை இச்சைவழி இயங்கும் தசைகள் மூலமும் கட்டுப்படுத்தப்படும்.
சிறுநீர்ப்பையில் சிறுநீர் இல்லாத போது பரிவு நரம்புத் தொகுதியின் தூண்டலினால் சிறுநீர்ப்பை தளர்வாகவும், உட்புற இறுக்கித் தசைகள் சுருங்கியும் காணப்படும். நிரம்பிய நிலையில் சிறுநீர்ப்பையின் சுவரில் ஏற்படும் தூண்டலினால் பராபரிவு நரம்புத் தொகுதியின் தூண்டலினால் சிறுநீர்ப்பையில் சுருக்கம் ஏற்பட்டு இறுக்கித் தசைகள் தளர்ந்து சிறுநீர் வெளியேற்றப்படும். எனினும், வெளிப்புற இறுக்கித் தசை இச்சைவழி இயங்கக்கூடியது. எனவே, வளர்ந்தோரில் சிறுநீர் வெளியேறல் கட்டுப்படுத்தப்பட முடியும்.

நோய் நிதானிப்பு நோக்கிலான சிறுநீரின் பங்களிப்பு

UFR (Urin Full Report) சிறுநீரின் முழு அறிக்கை

இதன் போது சிறுநீரின் கூறுகள் பகுப்பாய்வு செய்யப்படும். குருதிக் குழியங்கள், புரதங்கள், சீழ் கலங்கள், மேலணிக் கலங்கள், குளுக்கோசு போன்றவற்றின் தகவல் பெறப்படும். இக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு தகவல்கள் பெறப்படும்.
கிரியற்றினின்
-தொழிற்பாட்டு மட்டம்
ஆரோக்கிய நிலைAlbumin-ஆரோக்கிய நிலைபுரதம்
-சிறுநீரக செயலிழப்பு
கலன்கோள சிதைவுGlucose-வெல்ல நீரிழிவு

Urin Culture Report சிறுசீர் வளர்ப்பு அறிக்கை

தொற்றுக்களை அடையாளப்படுத்துவதற்காக சிறுநீரின் குறிப்பிட்ட அளவை கிருமியழிக்கப்பட்ட ஊடகங்களில் உட்புகுத்தி வளர்ப்புச் செய்து நுண்ணுயிர்க் கொல்லி உணர்திறன் பரிசோதனை (Anti Biotic Sensivity Test/ ABST) மூலம் சிகிச்சைகளின் பொருட்டு பயன்படுத்தப்படும்.

சிறுநீரகத்தின் தொழிற்பாட்டில் பங்களிக்கும் ஓமோன்கள்

ADH

சிறுநீர்த் தாங்கு சிறுகுழாயின் சேய்மை மடிந்த சிறுகுழாயிலும், சேர்க்குங்கானிலும் தொழிற்படும். உடலிலுள்ள நீரின் அளவு குறையும் போது ADH சுரக்கப்பட்டு நீர் மீள அகத்துறிஞ்சப்படும்.

Aldesterone

Na+, நீர் என்பன அகத்துறிஞ்சப்படலை தூண்டும். குருதியில் உப்புக்களின் அளவு குறையும் போது (பிரசாரண அமுக்கம் குறையும் போது) Aldesterone சுரப்பு அதிகரிக்கும். குருதியில் சாதாரண கனவளவையும், அமுக்கத்தையும் பிரதான கலப்புற பதார்த்தம் சோடியம் ஆகும். Aldesterone சிறுநீரகங்களைத் தூண்டுவதால் குருதியின் சாதாரண கனவளவையும், அமுக்கத்தையும் பேணுகின்றது. இது இயல்பான உடற்தொழிற்பாடுகளுக்கு அவசியமாகும்.

-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.