News

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குதல் குறித்த ஜனாதிபதியின் அறிவுறுத்தல்


தகுதிவாய்ந்த பட்டதாரிகளை அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் தொழிலுக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 150,000 பேருக்கான தொழில்வாய்ப்பு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொருத்தமானோரை தெரிவுசெய்யும் போது, ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் வறுமைக் கோட்டின் கீழுள்ளவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரச சேவையிலுள்ள பலவீனங்களையும் குறைபாடுகளையும் நிவர்த்திக்கும் வகையில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில், புதிய நியமனங்களை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Lanka Education. Powered by Blogger.