News

தரம் - 5 - சுற்றாடல் - அறிவுத்தாரகை ஆசானின் மாதிரி வினாக்கள் விடைகளுடன்

 



இவ்வாக்கம் பிரபல ஆசிரியர்: அறிவுத்தாரகை. ஏ.எம். சனூஸ் அவர்களால் தயாரிக்கப்பட்டது

  • இலக்கம் 1 தொடக்கம் 30 வரையுள்ள ஒவ்வொரு வினாவுக்கும் பொருத்தமான விடையைத் தரப்பட்டுள்ள விடைகளிலிருந்து தெரிவு செய்து அதன் கீழ்க் கோடிடுக.

1. பின்வரும் பூக்களிடையே நறுமணம் வீசும் பூ 

(1) காட்டு மல்லிகை         

(2) நத்தியாவட்டை         

(3) மல்லிகை 

2. புளிய மரத்தின் இலைகளின் வடிவத்தை ஒத்த வடிவமுள்ள இலைகள் இருக்கும் தாவரம்.

(1) அகத்தி                             

(2) வல்லாரை                     

(3) பொன்னங்கண்ணி 

3. ஆபத்து ஏற்படுவதை உணர்ந்தவுடன் தனது உடலை வட்டமாகச் சுருட்டிக் கொள்ளும் விலங்கு யாது?

(1) அட்டை 

(2) மயிர்கொட்டி 

(3) மரவட்டை 

4. மழைபெய்யப் போவதை உணர்ந்து கொள்ளத்தக்க விலங்கின் நடத்தை? 

(1) பூனை கத்தும் 

(2) ஈசல் பறத்தல் 

(3) நாய் குரைத்தல் 

5. கையில் ஒட்டிய பலாக்காய்ப் பாலை எளிதாக அகற்றப் பயன்படுத்தத்தக்க பொருள் பின்வருவனவற்றுள் எது?  

(1) சவர்க்காரம் 

(2) வெந்நீர் 

(3) மண்ணெண்ணெய் 

6. பயிர்களை வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் மாற்று முறைகளின் அனுகூலமாக அமையாதது? 

(1) இடவசதி உள்ள இடத்தில் மாத்திரம் பயிரிடத்தக்கதாக இருத்தல். 

(2) எளிதாகப் பராமரிக்கத்தக்கதாக இருத்தல். 

(3) வெயில், மழை ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கத்தக்கதாக இருத்தல். 

7. பிளாத்திற்கு கோப்பையில் அடைக்கப்பட்ட யோக்கட்டை உண்பதற்கு முன்பாக விசேடமாக கவனத்தில் கொள்ள வேண்டியது. 

(1) அடைக்கப்பட்ட தேதி

(2) காலாவதியாகும் திகதி 

(3) பொருளின் தரம் 

8. இத்தையல் முறைக்கு வழங்கும் பெயர். 


(1) சங்கிலித் தையல் 

(2) நரம்புத் தையல் 

(3) கம்பளித்தையல் 

9. அரசாங்க நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல்களை அறிவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்? 

(1) 1939 

(2) 1919

(3) 1910

10. இந்நாட்டினுள்ளே பதிவுத்தபால் மூலம் கடிதத்தை அனுப்புவதற்கு குறைந்தபட்சம் எவ்வளவு பெறுமானமுள்ள முத்திரை தேவைப்படும்?

(1) 45 ரூபாய் 

(2) 35 ரூபாய் 

(3) 30 ரூபாய் 

11. வீட்டுத்தோட்டத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மாத்திரம் இடம்பெறும் விடையைத் தெரிவு செய்க? 

(1) மண்வெட்டி, முள்ளு, தூக்குக்குண்டு 

(2) மண்வெட்டி, முள்ளு, குப்பைவாரி 

(3) குப்பைவாரி, துருத்தி, மண்வெட்டி

12. பின்வருவனவற்றுள் தொற்று நோயையும், அந்நோய்க்கு ஆளாவதற்கு ஏதுவான காரணியையும் கொண்டுள்ள சரியான விடை.

(1) சீதபேதி - நோய்க்காவி நுளம்பு தீண்டுதல் 

(2) கொப்பளிப்பான் - நோய்க்காவிகளான ஆட்கள் மூலம் 

(3) மலேரியா - அசுத்தமான உணவு, நீர் உட்கொள்ளல் 

13. இவ்வுரு உணர்த்தும் கருத்து யாது? 

(1) மின் விநியோகிக்கும் இடம் 

(2) இலங்கை அஞ்சல் திணைக்களம் 

(3) இலங்கை மின்சார சபை

14. சுத்தமான நீரில் நல்ல முட்டையினை இடும் போது யாது நிகழும்? 

(1) முட்டை அமிழ்ந்து மிதக்கும் 

recent/hot-posts

(2) முட்டை அடிப்பகுதி வரை அமிழும் 

(3) முட்டை நீர்மட்டத்திற்கு மேல் மிதக்கும் 

15. இழக்கப்பட்ட அடையாள அட்டைபற்றி அறிவித்தல், மோட்டார் சைக்கிளுக்கான உத்தரவுச் சீட்டைப் பெறுதல், வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரதியைப் பெறுதல் என்னும் அலுவல்களுக்காக செல்ல வேண்டிய இடங்கள் முறையே.

(1) பிரதேச செயலகம், பொலிஸ், மாவட்ட தேர்தல் ஆணையாளர் அலுவலகம் 

(2) பொலிஸ், பிரதேச செயலகம், மாவட்ட தேர்தல் ஆணையாளர் அலுவலகம் 

(3) கிராம சேவகர், பிரதேச செயலகம், மாவட்ட தேர்தல் ஆணையாளர் அலுவலகம்

16. பின்வரும் உபகரணங்களில் குளிர்பான போத்தல்களைத் திறக்கப் பயன்படுத்தப்படுவது யாது? 

(1) குறடு 

(2) பாக்குவெட்டி 

(3) மூடிதிறப்பான் 

17. தாவரத்திற்குப் பூவிலிருந்து கிடைக்கும் பயன் யாது?

(1) அழகூட்டல் 

(2) அதன் இனத்தைப் பரப்ப உதவுதல் 

(3) நறுமணத்தைப் பரப்பல் எதிர்பு 

18. நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு இலகுவான உகந்தமுறை?

(1) சுற்றாடலில் நீர் தேங்குவதற்கு இடமளிக்காதிருத்தல் 

(2) வீட்டில் உள்ள நுளம்புகளை அழித்தல் 

(3) உடலில் காவட்டம் புல்லெண்ணெயை பூசுதல் 

19. இலங்கையில் மிக உயரமான நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டமும் மாகாணமும் முறையே. 

(1) பதுளை - ஊவா மாகாணம் 

(2) நுவரெலியா - மத்திய மாகாணம் 

(3) கண்டி - மத்திய மாகாணம் 

20. கொழும்பு முகத்துவாரப் பிரதேசக் கடலில் விழுவது. 

(1) மகாவலி கங்கை 

(2) களனி கங்கை 

(3) களு கங்கை 

21. வனைசில்லு பயன்படுத்தப்படுவது

(1) வனைதல் தொழிலில் 

(2) வயல் வேலைகளில் 

(3) சுரங்கக் கைத்தொழிலில்

22. பின்வரும் கூற்றுக்களில் சரியான கூற்றைத் தெரிவு செய்க?

(1) சூரியனைச் சுற்றி புவி செல்கிறது. 

(2) புவியைச் சுற்றி சந்திரன் செல்லவில்லை.

(3) புவியைச் சுற்றி சூரியன் செல்கிறது. 

23. “ நீர் பிசாசு ' என்பது 

(1) நீர் நிலைகளுக்கு அருகே வாழும் ஒரு பிராணி 

(2) இரவு வேளைகளில் பயிர் நிலங்களுக்கு வரும் ஒரு பிராணி 

(3) பிராணிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காகப் பயன்படும் ஓர் அமைப்பு 

24. உருவில் உள்ளவர். 


(1) கலாநிதி சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா 
(2) திரு. எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா 
(3) சேர் . டீ.பி.ஜயதிலக 

25. உடலுக்குத் தேவையான புரதத்தைப் பெறுவதற்கு உகந்த உணவுகள் யாவை? 

(1) பருப்பு, உருளைக்கிழங்கு 
(2) கௌபி, பருப்பு 
(3) வல்லாரை, சோயா 

26. தொடர்பாடலுக்குப் பயன்படுத்தப்படும் பிரசித்தி பெற்ற இலத்திரனியல் ஊடகம் ஒன்றல்லாதது. 

(1) செய்திப் பத்திரிகை 
(2) இணையம் 
(3) தொலைக்காட்சி 

27. பின்வரும் தொடர்புகளுள் ஒன்றை ஒன்று கவரக்கூடிய முனைவுகளைக் கொண்ட காந்த அமைப்பு யாது? 


28. பின்வருவனவற்றுள் கிராமிய விளையாட்டுக்களைக் கொண்ட விடைத் தொகுதி யாது? 

(1) குண்டு போடுதல், பூப்பந்து, எட்டுக்கோடு 
(2) கிளித்தட்டு, பசுவும் புலியும், சடுகுடு 
(3) சடுகுடு, கபடி, பல்லாங்குழி
 
29. பின்வரும் உபகரணங்களுள் நடுவில் சுழலிடம் காணப்படாத உபகரணம்.


 
30. 

படங்களில் தரப்பட்டுள்ள பாசிப்பயறு வித்துக்கள் அடங்கிய பாத்திரங்களைச் சில நாட்களின் பின்னர் அவதானிக்கும் போது, எந்தப் பாத்திரத்திலுள்ள பாசிப்பயறு வித்துக்கள் முளைத்திருப்பதைக் காணலாம். 

(1) A    
(2) B
(3) C


விடைகள் 

1. 3 
2. 1 
3. 3 
4. 2 
5. 3 
6. 1 
7. 2 
8. 3 
9. 2 
10. 1 
11. 2 
12. 2 
13. 3 
14. 2 
15. 2 
16. 3 
17. 2 
18. 1 
19. 1 
20. 2 
21. 1 
22. 1 
23. 3 
24. 1 
25. 2 
26. 1 
27. 3 
28. 2 
29. 2 
30. 2

No comments

Lanka Education. Powered by Blogger.