News

2021 இல் 150 நாட்களே பாடசாலைகள் நடைபெறும்

கல்விப் பொதுத் தராதர உயர்தர சாதாரணதர பரீட்சைகள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன

இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் நடத்தப்பட வேண்டிய உயர்தர பரீட்சைகளை ஒக்டோபர் 4ஆம் திகதியும் , டிசம்பரில் நடத்தப்பட வேண்டிய சாதாரண தர பரீட்சைகளை 2022 ஜனவரியிலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.

கல்வி அமைச்சில்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெளிவுபடுத்தினார்.



இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் ஒக்டோபர் 4 ஆம் திகதி ஆரம்பமாகி 30 ஆம் திகதி வரை நடைபெறும்.

அதேபோல் ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு வருடத்தில் 200 நாட்கள் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உரிய காலத்தில் தேசிய பரீட்சைகள் எதுவும் 2020 ஆம் ஆண்டு இடம் பெறவில்லை. 2020ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை கடந்த மாதம் இடம் பெற்றது.

அதே வேளை 2021 ஆம் ஆண்டு பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைளை 150 நாட்களாக குறைக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் 130 ஆகக் குறைந்துள்ளது.2021 க்கான சாதாரண தர பரீட்சையினை இவ்வருடம் டிசம்பர் மாதம் நடத்த ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பனும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பரீட்சை ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்படப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான தேசிய பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தயாராக போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  வழங்கப்பட்டுள்ள காலத்தை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்

-----------------------------------------------

இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


Get in Touch With Us to Know More

Like us on Facebook

No comments

Lanka Education. Powered by Blogger.