News

உடனடியாக A/L பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கு...




 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.


பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் உங்கள் கையடக்கத் தொலைபேசியின் ஊடாக பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொள்வதற்காக Exams என டைப் செய்து இடைவெளி, பின் உங்கள் சுட்டிலக்கத்தை குறிப்பிட்டு 7777 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இம்முறை வௌியான பெறுபேறுகளின் அடிப்படையில் 64.39 சதவீதமான மாணவர்கள் பல்கலைகழகங்களிற்கு தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பரீட்சை மீள் பரீசிலனைக்காக விண்ணப்பங்கள் எதிர்காலத்தில் வௌியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை பரீட்சைக்காக 362,824 பரீட்ச்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் அவர்களுள் 194,297 மாணவர்கள் பல்கலைகழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Lanka Education. Powered by Blogger.