News

தரம் 1 இற்கு மாணவர் இணைப்பு, '5 வருட வாக்குப்பதிவை இணையத்தில் பெறலாம்

2021ஆம் ஆண்டில், பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைப்பதற்காகவுள்ள விண்ணப்பங்களில் கோரப்பட்டுள்ள ஐந்து வருடங்களுக்கான வாக்குப் பதிவுத் தரவுகளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது கிராம சேவகரிடமிருந்தோ பெற்றுக்கொள்ள முடியுமென்று, ஆணைக்குழு அறிவித்துள்ளது.



தேர்தல்கள் ஆணைக்குழுவின் elections. gov. lk என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்செலுத்துவதன் மூலம், அந்தத் தரவுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று, தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர்மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில், பொதுமக்களை ஒன்றுதிரட்ட முடியாத காரணத்தால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி : மிரர்

No comments

Lanka Education. Powered by Blogger.