News

சாதாரண தரத்தில் 9ஏ எடுத்தவர்களுக்கு புலமைப் பரிசில்கள்

க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கையின் சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM)புலமைப் பரிசில்களை வழங்க முன்வந்துள்ளது.
இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல் எனும் தொணிப்பொருளின் கீழ் 2019 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் எழுதி ஒன்பது ஏ (9A) சித்திகளைப் பெற்றவர்களுக்கு இலவசமான ஒன்லைன் பாடநெறி புலமைப் பரிசிலாக வழங்கப்படவுள்ளது.
ஒன்லைனில் வழங்கப்படும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் பாடநெறியை 10201 மாணவர்களுக்கு வழங்குதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை 01.07.2020 முதல் 15.07.2020 வரை ஒப்படைக்கலாம்.

விண்ணப்பங்களை இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் இணையத்தளத்தில் (www.slim.lk) அல்லது 0112675000 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

No comments

Lanka Education. Powered by Blogger.