News

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் - கல்வி அமைச்சு




கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் பாடசாலை ஆரம் பிக்கப்பட்டதன் பின்னர் நடாத் தப்படுமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும் தெரிவித்துள்ளார். முன்னதாக கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவதற்கு ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரி விக்கப்பட்டது.
அத்துடன், உயர் தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் பாடத்திட்டத்தை முழுமைப்படுத்தவும், பரீட்சை தகு தயாராகவும் உரிய காலவ காசம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக பாட சாலைகள் ஆரம்பிக்கப்படாத நிலையில், ஆசிரியர்கள் மற் றும் மாணவர்களின் வேண்டு கோளை ஏற்று உயர்தர பரீட்சை யை நடத்துவதற்குத் தீர்மானிக் கப்பட்ட திகதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டது.
இதன்படி, எதிர்வரும் 29 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட் டதன் பின்னரே கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடத்தப்படும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும் தெரிவித் துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Lanka Education. Powered by Blogger.