News

உயர்தர மாணவர்களுக்கு வட்டி அற்ற கடன் உதவி - கல்வி அமைச்சு

உயர்தர மாணவர்களுக்கு வட்டி அற்ற கடன் உதவி மூலமான மேற்படிப்புக்கான வாய்ப்பு

அதிபர்களிடம் விண்ணப்பங்களை உறுதிப்படுத்திக் கொள்ள 06 நாட்கால அவகாசம்

உயர் கல்வி அமைச்சின் மாணவர் கடன் துறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியற்ற மாணவர் கடன் முன்மொழிவு முறையின் கீழ் உயர்தர மாணவர்களுக்கு மேற்படிப்பைத் தொடர அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, அதற்காகப் பாடசாலை விண்ணப்பதாரிகளாக 2016, 2017, 2018ம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கு அதிபர்களால் விண்ணப்பத்தை உறுதி செய்துகொள்வதற்காக 6 நாள் கால அவகாசம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, 2018/2019 கல்வி வருடங்களுக்காக அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் பதிவு செய்வதற்கு எதிர்பார்க்கும் மேற்படி வருடங்களில் உயர்தர சித்தி பெற்ற மாணவர்களுக்கு 2020 ஜுன் மாதம் 09, 10, 11, 12, 15, 16 ஆகிய தினங்களில் பாடசாலை நேரத்துள் விண்ணப்பத்தை உறுதி செய்து கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு கல்விச் செயலாளர் என். எச். எம். சித்ரானந்த அவர்களால் பாடசாலைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் சமகால நிலைமையில் அதிபர்களால் விண்ணப்பத்தை உறுதி செய்து கொள்வதற்குக் கணிசமான மாணவர்களுக்கு இயலாதிருப்பதனால் உயர் கல்வி, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளரினால் கல்விச் செயலாளரிடம் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமையவே கல்வி அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஏற்பட்டுள்ள கவனத்துக்குரிய நிலவரம் குறித்து அவதானம் செலுத்தி சுகாதார அலுவலகர்களினால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்து விண்ணப்பப்பத்திரங்களை உறுதி செய்து கொள்ள வேண்டுமெனக் கல்வி அமைச்சு மேலும் அறியத் தருகிறது.

ஊடகப் பிரிவு
கல்வி அமைச்சு



No comments

Lanka Education. Powered by Blogger.