News

பொருளியல் வரதராஜன் ஆசிரியரின் “நெகிழ்ச்சிக் கோட்பாடு” - விளக்கவுரை புத்தகம்

பிரபலமான, புகழ் பூத்த, தமிழ் மண்ணின் பெருமைமிகு பொருளியல் ஆசான் அமரர் எஸ்.வரதராஜன் ஞாபகார்த்தமாக அவர் எழுதிய க பொ த உயர்தர மாணவர்களுக்கான நூல்கள் வெளியிடப்படவுள்ளன. அதன் முதல் வெளியீடாக ”நெகிழ்ச்சிக் கோட்பாடு” வெளிவந்துள்ளது.

இவ் வெளியீட்டினை செய்த ஆசிரியரின் மகன் பார்திபன் வரதராஜன் உள்ளத்தில் இருந்து உதிர்ந்த சில வரிகள்.

// "நன்றாக மூடி வைக்கப்பட்ட புத்தகங்கள் வெறும் காகிதக் கட்டுக்கள் " இது அப்பா அடிக்கடி கூறும் வார்த்தைகளில் ஒன்று. அந்தவகையில அப்பா தன்னுடைய வாழ்வியலில் தன்னுடைய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக எழுதிய புத்தகங்களையும் அவ்வாறு மூடிவைப்பது ஏற்புடையது அல்ல.
ஏற்கனவே அப்பாவுடைய நூல்கள் அவரின் நினைவாக மாணவர்களுக்கும் நூலங்களுக்கும் கடந்த காலங்களில் வழங்கப்பட்டன. தற்போது அவரின் விருப்பத்தினையும் கனவினையும் சிரமேற்கொண்டு அவர் எழுதிய புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் அப்புத்தகங்களை உடனடியாக அச்சுப்பதிப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாகவும் புத்தங்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதாலும் அவர் உருவாக்கிய புத்தகங்களை அவர் உருவாக்கிய படியே E Book எனப்படுகின்ற மென் நகலாக (Soft Copy) வெளியிடுகின்றேன். வரதராஜன் ஞாபகார்த்த வெளியீட்டகம் மூலம் அவர் எழுதிய பொருளியல் நூல்கள் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக தொடர்ச்சியாக வெளியீடு செய்யப்படும்.
அந்தவரிசையில் பொன் சிவகுமாரன் வீரச்சாவடைந்த தினமாகிய இன்றைய எமது தேசத்திற்கான மாணவர் எழுச்சி தினத்தில் எமது மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக முதலாவது வெளியீடாக இது வெளிவருகின்றது.
நன்றி - பார்திபன் வரதராஜன் //
-----------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.