News

பாடசாலைகள் முதற்கட்டமாக நாளை முதல் ஆரம்பம்


கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கையின் கீழ் முதற்கட்டத்தின் கீழான பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளன.
பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை முகாமைத்துவம், கல்விசாரா ஊழியர்கள் போன்றோர் ஆகியோருக்காக அன்றைய தினம் பாடசாலைகள் திறக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொற்று நீக்கம் செய்தல், தூய்மைபடுத்துதல், பாடங்களுக்கான நேர அட்டவணை தயாரித்தல் போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள்.
இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றன.
அன்றைய தினத்தில் தரம் 5 ஆம், 11 ஆம், 13 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வது அவசியமாகும். பத்தாம், 12 ஆம் தரங்களில் கற்கும் மாணவர்கள் ஜூலை மாதம் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு அழைக்கப்படவிருக்கிறார்கள் என்றார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
Tags:- School,Start,Grade 5,Grade 11,Grade 13, July

No comments

Lanka Education. Powered by Blogger.