News

கொரோனா கால விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாக மாற்றிக் கொள்வது எவ்வாறு?


கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகக் காரணமாக கல்விச் செயற்பாடுகளும் தடைப்பட்டுள்ளன. தற்போது 'வற்ஸ் அப்' குழுக்கள்இ 'ஸூம்' கல்வி முறைகள்இ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டு மாணவர்களின் கற்றலை விருத்தி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எமது நாட்டில் 2009ம் ஆண்டு காலப் பகுதியில் வடக்குஇ கிழக்கு பகுதிகளில் யுத்த நிலைமை காரணமாக பாடசாலைகள் 2இ 3 மாதங்கள் மூடப்பட்டிருந்தன. அந்நேரம் இவ்வாறான தொழில்நுட்ப வசதிகள் மிகக் குறைவு. ஆனால் மாணவர்கள் சுயகற்றல் மூலமாக தொடர்ந்து தமது கல்விச் செயற்பாடுகளை மேற்கொண்டமை நினைவுக்கு வருகிறது.


தற்போதும் மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை உரிய முறையில் பயன்படுத்தி சுயகற்றலை மேற்கொள்வது சிறந்தது. எமக்கு தொழில்நுட்ப சாதனங்கள் எவ்வளவுதான் இருந்தாலும்இ பரீட்சைக்கு மாணவரின் சுயகற்றலே உதவும்.
'பாடசாலைக்கு அல்லது தனியார் வகுப்புகளுக்குச் சென்றால்தான் நான் படிப்பேன்' என்ற எண்ணத்தை விட்டு மாணவர்கள் இக்காலத்தில் வீடுகளை பாடசாலையாக எண்ணி சுயமாக கற்றலை தொடர வேண்டும். பாடரீதியில் ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால் உரிய ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். அண்மையிலுள்ள நண்பர்களுடன் தொடர்பு கொண்டு கற்கலாம்.
குறிப்பிட்ட சில மாணவர்கள் மட்டுமே 'வற்ஸ் அப்' வசதிகளைக் கொண்டுள்ளனர். பலர் அந்த தொழில்நுட்ப வசதிகளைப் பெற முடியாமலேயே இருக்கின்றனர். எனவே ஒவ்வொரு மாணவரும் தமது பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குவது சிறந்தது.
அண்மையில் க.பொ.த (சா.த) பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியிருந்தன. அடுத்த வருடம் அதே காலப் பகுதியில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவரும் என்பதனை மாணவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக மாணவர்கள் தம்மை இப்போதிலிருந்து தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சில உபாயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இலகுவான முறையில் வினைத்திறனாகக் கற்பதற்கு தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

பரீட்சைகளை எதிர்கொள்ள நேரிடும் போது பெரும்பாலான மாணவர்களுக்கு அது பாரிய சவாலாக அமைந்து விடுகிறது. பரீட்சைக் காலங்களில் ஏற்படக் கூடிய பதற்ற நிலையானது பல மாணவர்களின் ஆற்றலை முடக்கி விடுகின்றது. பரீட்சைக்காக முன்கூட்டியே தம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் போது இவ்வாறான பதற்ற நிலைமை ஏற்படுவதனை தவிர்த்துக் கொள்வதோடு பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
கற்றல் செயன்முறையை சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டம் ஒன்றின் மூலமாக மேற்கொள்வதன் மூலம் வெற்றிகரமான கற்றல் செயன்முறையாக அதனை மாற்றியமைத்துக் கொள்ளலாம். அதற்காக பின்வரும் விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.
கற்பதற்கு முன்பு கற்றலுக்கான ஓர் கால அட்டவணையைத் தயாரித்துக் கொள்வது முக்கியமானது. அதாவது பரீட்சைக்குரிய காலம் வரும் வரையில் காத்திருக்காது முன்கூட்டியே கற்றுக் கொள்ள வேண்டிய பகுதிகளை வரையறை செய்து நேரசூசி ஒன்றைத் தயார் செய்து அதன்படி ஒழுக வேண்டியது அவசியமாகும். இவ்வாறு திட்டமிட்டு பாடங்களைக் கற்கும் போது பரீட்சை நெருங்கும் காலத்தில் ஏற்படக் கூடிய பதற்றநிலைஇ பயம் ஆகியவற்றைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
சிறந்த கற்றல் முறைகள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள் பிரான்ஸிஸ் றொபின்ஸன் (1970) முன்வைத்த முறையானது 5 படிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது.
மேலோட்டமாக ஆய்வு செய்தல்இவினாவுதல்இவாசித்தல்இஉரத்து வாசித்தல்இ மீளநோக்குதல்
மேலோட்டமாக ஆய்வு செய்தல் என்பது இன்று நாம் என்ன பாடத்தைக் கற்கப் போகின்றோம் என்பது பற்றிய முழுமையான ஓர் உணர்வினை ஏற்படுத்திக் கொள்வதாகும். இதற்காக பாடத் தலைப்புஇ உப தலைப்புகள்இ பகுதிகள்இ சாராம்சம் போன்றவற்றை நோக்குவதன் மூலம் இன்று நாம் எது தொடர்பாகக் கற்கப் போகின்றோம் என்பது தொடர்பான ஓர் உணர்வினை ஏற்படுத்திக் கொள்ளலாம்.


நாம் படிக்கும் விடயங்கள் தொடர்பான வினாக்களை உருவாக்கிக் கொள்ளல் என்பது அடுத்தபடி முறையாகும்.
உதாரணமாகஇ நாம் வளிமண்டலம் தொடர்பாகக் கற்கப் போகிறோம் எனக் கொள்வோம். வளிமண்டலம் என்றால் என்ன? வளிமண்டலம் எவ்வாறானது? வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக்கள் எவை? அவ்வாயுக்கள் என்ன வீதத்தில் காணப்படுகின்றன? வாயுக்களின் வீதத்தில் ஏற்படும் மாற்றம் புவியில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் எவை என்பன போன்ற வினாக்களை ஒழுங்குபடுத்திக் கொள்வதன் மூலம் குறித்த பாடத்தைக் கற்றதன் பின்னர் ஏற்கனவே அமைத்துக் கொண்ட வினாக்களுக்கு விடையளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற ஓர் உந்தல் ஏற்படுகின்றது.
மூன்றாவது படிமுறை வாசித்தல் என்பதாகும். வாசித்தல் என்பது நாம் உருவாக்கிக் கொண்ட வினாக்களுக்கு விடை காண உதவுகின்றது. பொருளுள்ள வகையில் வாசிப்பதற்கும்இ படிப்பதற்கும் இது துணையாக அமைகின்றது. மேலும் பகுதிகளாகப் பகுத்து வாசித்தல் துரிதமாக விடயங்களைத் தேடியறியக் கூடியவாறு வாசித்தல் ஆகிய நுட்பமுறைகள் மூலம் வாசிப்புத் திறனையும் விருத்தி செய்து கொள்ளலாம்.
உரத்து வாசித்தல் என்பது அடுத்த படிமுறையாகும். எனினும் இது இன்று பெரும்பாலானோரால் கையாளப்படுவதில்லை. படிப்பவற்றுள் சுமார் 1ஃ3 பகுதியையேனும் உரத்து வாசித்தல் வேண்டும். இதன் போது கண்இ காது ஆகிய இரண்டு புலனுறுப்புகளினூடாகவும் செய்தி மூளைக்கு அனுப்பப்படுகின்றது. இதனால் மனதில் பதியும் வீதம் அதிகரிக்கின்றது.
மீளநோக்குதல் என்பது ஏற்கனவே நாம் கற்ற விடயங்களை நினைவு கூருவதாகும். இங்கு படித்தவை தொடர்பாக மீண்டும் கவனம் செலுத்தப்படுவதன் காரணமாக ஞாபகத்தில் தேக்கப்படும் அளவு அதிகரிக்கின்றது.
சுருக்கக் குறிப்பெழுதல்இ கற்கும் பாடத்தின் பிரதான கருத்துகளைப் பிரித்தெடுத்தல்இ அட்டவணை அடிப்படையில் தரவுகளை குறித்தல்இ முக்கியமான சொற்பதங்களை அடிக்கோடிடல் அல்லது உருத்துலக்குதல் பின்னூட்டல் செய்து கற்றல்இ பொருத்தமான பாடப் பகுதிகளைத் தனியாகவும் குழுவாகவும் கற்றல் என்பன சிம்சன்இ நெஸ்ட் ஆகியோரின் ஆய்வின் பிரகாரம் சிறந்த கற்றல் நுட்பங்களாக முன்வைக்கப்பட்டன.
இங்கு குறிப்பிடப்பட்ட அனைத்து நுட்பங்களும் சுயகற்றல் திறன்களை வளர்ப்பதற்கான பயனுள்ள சில குறிப்புகளாகும். சுயகற்றல் திறன்களை மாணவர்கள் விருத்தி செய்து கொள்கின்ற போதுஇ கல்வியில் அவர்களின் வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது.
மாணவர்கள் தொடர்ச்சியாக தொலைபேசியைப் பயன்படுத்துவதை தவிர்த்தல் அவசியம். முடியுமான வரை பரீட்சை வினாக்கள்இ குறிப்புக்கள் என்பவற்றை வன்பிரதி எடுத்து தமது கல்வியியைத் தொடர வேண்டும்.
தற்போது வீட்டில் உள்ள மாணவர்கள் ஏற்கனவே கற்ற பாடப் பரப்புகளை மீட்டிப் பார்க்கலாம். அத்துடன் கடந்த கால வினாக்களுக்கு விடை எழுதிப் பார்க்கலாம். இவ்வாறான சுயமான முயற்சிகள் மூலம் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
நன்றி
வி.பிரசாந்தன் - தலவாக்கலை

No comments

Lanka Education. Powered by Blogger.