News

கொரோனா பரவல் தொடர்பில் போலியான செய்திகளை வௌியிடுவோருக்கு எச்சரிக்கை!


கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் போலியான செய்திகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவோரை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துளள்ளன.

இந்த குழுவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 26 அதிகாரிகள் அடங்குவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு போலி செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது ´தண்டனைச் சட்டத்தின் 120 ஆம் பிரிவுக்கு அமைய தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி குற்றாவாளிகள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு இரண்டு வருட சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமையவும் இது குற்றம் எனவும், சரியான தகவல்கள் தெரியாவிடின் அவ்வாறான செய்திகளை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் எனவும் அவர் கேட்டுள்ளார்.

Tags:- Lanka Educations, Learn Easy, lkedu, Corona, False , Fake News, Crime,Medi, Social Media, Department, Criminal, Investigation

No comments

Lanka Education. Powered by Blogger.