News

கிளிநொச்சி வளாக மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற முடியாது


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் பரீட்சைகள் நிறைவடையும் நாள் வரை வளாகத்தை விட்டு வெளியேற முடியாது என்று மத்திய சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களும் வளாகத்துக்குள் நடமாட முடியும். எனினும் எந்தவொரு மாணவரும் வளாகத்தைவிட்டு வெளியேறி மீள வளாகத்துக்குள் வர முடியாது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் பரீட்சை நடவடிக்கைகள் நாளை வழமைக்குத் திரும்பும் என்று வளாகத்துக்குப் பொறுப்பான பிரதிப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு கோரோனா தொற்று ஏற்படவில்லை என அவரது உயிரியல் மாதிரிகளின் பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அவரது பெற்றோரின் பிசிஆர் பரிசோதனை முடிவிலும் அவர்களுக்கு இல்லை என்று தெரியவந்தது.

அதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை மீளத் திறந்து இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சையை நடத்துவது தொடர்பில் புதிய கட்டுப்பாட்டுடன் சுகாதாரத் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் பரீட்சைகள் நிறைவடையும் நாள்வரை வளாகத்தைவிட்டு வெளியேற முடியாது.

அனைத்து மாணவர்களும் வளாகத்துக்குள் நடமாட முடியும். எனினும் எந்தவொரு மாணவரும் வளாகத்தைவிட்டு வெளியேறி மீள வளாகத்துக்குள் வர முடியாது. அவர்களுக்கான உணவு வழங்கப்படவேண்டும்.

அத்தோடு விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கியிருக்க முடியும். மாணவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அனைத்து மாணவர்களும் முகக் கவசம் அணிவதோடு அடிக்கடி கைகளை உரிய தொற்று நீக்கிகொண்டு கழுவுதல்வேண்டும்.

எந்தவொரு வெளிமாவட்ட மாணவரும் வீடு சென்று திரும்பிவர அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று மத்திய சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Tags:- University of Jaffna, Kilinochi, Mask, Technical, Agriculture, Faculties, Final year, Students, Hostel, Room, Hand Wash, Health, Ministry, Exas, PCR, Test, Corona, Covid 19, Campus, Food, Sanitizer, Lanka Educations, Learn Easy, lkedu

No comments

Lanka Education. Powered by Blogger.