இணை பாடவிதான செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்

பாடசாலை வளாகத்திற்குள் இடம்பெறும் கொண்டாட்டங்கள் மற்றும் இணை பாடவிதான செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இரண்டாவது பாடசாலை வாரத்தில் எந்த விதத்திலும் அனுமதி வழங்கக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது பாடசாலை வாரத்தில் விழாக்கள் மற்றும் இணை பாடவிதான செயற்பாடுகளுக்கு அனுமதியளிப்பது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, பாடசாலை விளையாட்டு அணியினருக்கு பயிற்சியளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் பயிற்சிகளை முன்னெடுக்க முடியும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Tags:- Schools, Extra Curricular Activities, Sports Team, Lanka Educations, Learn Easy, lkedu




No comments