News

பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டு பரீட்சைகள் தொடர்பாக விசேட அறிவிப்பு!


கொரொனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்ற நிலையில் பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டு பரீட்சை அட்டவணைகளில் எந்தவித மாற்றங்களும் ஏற்படுத்தப்போவதில்லை என  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டு பரீட்சை அட்டவணைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை  என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  தலைவர் பேராசிரியர்  சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளுக்கமைய மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு பரீட்சை நடைபெறவதற்கான ஏற்பாடுகள் முன்கெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை   சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய பல்கலைக்கழகங்களில் இரண்டு குழுக்களாக   மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு  கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில்  கல்வி நடவடிக்கையில் மாற்றம்  ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Tags:- University, Final, Scheduled, President, Exams, Final Year, Rules, Regulations,Arrangements, Corona, Spreads, Lanka Educations, Learn Easy, lkedu

No comments

Lanka Education. Powered by Blogger.