News

பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!


சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கருத்திற்கொண்டு, பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவை பிரிவுகள் மறுஅறிவித்தல் வரை, மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் குறித்த பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்காக, இணையத்தளம் மற்றும் மின்னஞ்சல் முறைகளின் ஊடாக, விண்ணப்பிப்பதன் மூலம், 48 மணிநேரத்தில் அவற்றை வீடுகளுக்கே விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், மேலதிக தகவல்களை, பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் இணையத்தளத்தின் மூலம் அல்லது 0112 784 323 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலம் அல்லது 1911 எனும் துரித அழைப்பு இலக்கத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:- Exams, Results, Results Sheet, Department, E-Mail, Health, Action, One day service, Closed, Report, Apply, Online, Lanka Educations, Learn Easy, lkedu

No comments

Lanka Education. Powered by Blogger.