News

தசைச்சுருக்கப் பொறிமுறை

தசைச்சுருக்கப் பொறிமுறை

மயோசின் இழைகள் தலைகள் எனும் பகுதிகளைக் கொண்டவை. Actin இழைகள் பொருந்தும் தானங்களைக் கொண்டவை. சுரக்கம் நடைபெற ATP அவசியம். ATP Myosin இழையின் தலையுடன் பொருந்தும். ATP நீர்ப்பகுப்படைவதன் மூலம் சக்தி வழங்கப்பட்டு Myosin தலை தயார் நிலைக்கு கொண்டுவரப்படும். தயாரான தலைப் பகுதி Ca2+ இன் உதவியுடன் Actin இழையின் இணையும் பகுதியுடன் இணையும். இதனால் Mysoin இழைகள் குறுக்ககுப் பாலங்களைத் தோற்றுவிக்கும்.
சக்தி வழங்கப்படும் போது/ உயிர்ப்பூட்டப்படும் போது குறுக்குப் பாலங்கள் உட்புறமாகவும், மத்தியை நோக்கியும் வலுவான அடிப்புக்குள்ளாகும். Actin உம் Mysoin உம் ஒன்றையொன்று மேவி வலுக்குவதன் மூலம் தசை சுருங்கும். இவ்வாறு ATP பயன்பாட்டுடன் தசை சுருங்கும் போது பட்டி அதே நீளத்தில் காணப்பட J, H வலயம் குறுகச் செய்யப்படும்.
சுருங்கும் போது Actin இழைகள் தசைப்பாத்தின் மத்தியை நோக்கி இழுக்கப்படும். தளரும் போது ஒன்றிலிருந்து இன்னொன்று விலகிச் செல்லும். மீண்டும் தலைகள் விடுப்பட்டுக் கொள்ளவும், அடுத்த தொடர்புறும் தானத்தை நோக்கி நகரவும் ATP அவசியம். தொடர்ந்து இடம்பெறும் வலுவான அடிப்புகள் அவதானிக்கக் கூடிய தசைச் சுருக்கத்திற்கு காரணமாகும். ATP காணப்படாத பட்சத்தில் Myosin தலைகள் விடுபடமாட்டாது.
  
ATP ஆனது Actin இழையிலிருந்து விடுவிக்கப்பட்ட Myosin தலையுடன் இணையும்.
  
ATP நீர்ப்பகுப்படைந்து Myosin தலையை தயார் நிலைக்கு கொண்டுவரும்.
  
Ca2+ இன் உதவியுடன் Myosin தலையானது Actin இழையின் இணையும் பகுதியுடன் இணையும்.
  
சக்திப் பிரயோகமானது Actin இழையை வழுக்கச் செய்யும்.
Note:-
  • தசைக்கலங்கள் கூடுதலான குருதி விநியோகம் கொண்டவை.
  • சாதாரண மனிதனில் 2-3 குருதிக் கலன்களும், விளையாட்டு வீரர்களில் ஏறத்தாழ 7 குருதிக் கலன்களும் காணப்படும்.
  • ஒரு நரம்பு பல கிளைகளாக மாறி ஏறத்தாழ 150 தசை நார்களுடன் தொடுக்கப்பட்டிருக்கும்.
  • தசைக்கலங்கள் 2 வகைப்படும்.
    1. Slow twitch
    2. இது சாயமிடலின் போது சிவப்பு நிறமாகக் காணப்படும். காற்றுச் சுவாசம் மூலமாக மாத்திரம் சக்தியை பெற்றுக் கொள்ளும். அதிக குருதி விநியோகம் காணப்படும். மெதுவாகக் கழைப்படைய கூடியதாகும்.
    3. Fast twitch
    4. இது கிறியற்றீனை பொஸ்போரிலேற்றுவதன் மூலமும் கிளைக்கோஜனிலிருந்தும் சக்தி பெறும். இது விளையாட்டு வீரர்களில் அதிகம் காணப்படும். விரைவாகக் களைப்படைய கூடியதாகும்.

No comments

Lanka Education. Powered by Blogger.