News

பெரும் ஆர்வத்துடன் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள்


நாடளாவிய ரீதியிலான கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று அனைத்து பாடசாலைகளும் இயங்க ஆரம்பித்துள்ளதுடன் மாணவர்களும் பெரும் ஆர்வத்துடன் பாடசாலைக்கு வருகைதந்ததை காணமுடிகின்றது.

நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 தாக்கம் காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக இலங்கையில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இலங்கையில் கொவிட் 19 தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம் தொடக்கம் பாடசாலைகள் இயங்க ஆரம்பித்திருந்தன.

பொதுத்தேர்தல் காரணமாக மீண்டும் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களில் இன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.



கொவிட் 19 பாதுகாப்பு சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதாக பாடசாலைகள் இன்று (10) ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால் மாணவர்கள் அதிகளவில் இன்று பாடசாலைக்கு வருகை தந்ததாக பாடசாலை அதிபர்கள் தெரிவித்தனர்.

200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளில் சாதாரணமாக 5 நாட்களும் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவுள்ளதுடன் 200 மாணவர்களுக்கு அதிகான பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்புகளாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவுள்ளது.

200 மாணவர்களுக்கு அதிகமான பாடசாலைகளில் முதலாம் மற்றும் 5 ஆம் தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் திங்கட் கிழமையும், 2 ஆம் மற்றும் 5 ஆம் தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய் கிழமையும், 3 ஆம் மற்றும் 5 ஆம் தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் புதன் கிழமையும் இடம்பெறவுள்ளது.அத்துடன் வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் 4 ஆம் மற்றும் 5 ஆம் தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

No comments

Lanka Education. Powered by Blogger.