News

மொழித்திறன் வழிகாட்டல் - வினாக்கள்01. பின்வரும் வினாக்களில் இணைமொழித் தொடரைத் தெரிவு செய்து அதன் கீழ்க் கோடிடுக.

i. கன்னங்கரியஈவு இரக்கம்பஞ்சமாபாதகம்பாட்டுச் சத்தம்

ii. வாடிவதங்கி, பாகப் பிரிவினை, அறியாப் பருவம்உத்தம நண்பன்


02. பின்வருவனவற்றுள் பிழையான சொல்லைத் தெரிந்து அதன் கீழ்க் கோடிடுக.

i. மேற்கோள்வெந்நீர்கடற்கரைவெண்ணை

ii. அத்தியட்சகர்நாட்காட்டிபன்னிரெண்டுஇணையம்


03. பின்வருவனவற்றுள் சரியான சொற்புணர்ச்சியின் கீழ்க் கோடிடுக.

i.  கை + நூல்

கைநூல்   கைனூல்  கைந்நூல்  கைன்னூல்

ii. மரம்வேர்

மரவேர்    மரம்வேர்  மரத்துவேர் மரம்பேர்


04.  பின்வரும் வினாக்களுக்கு சரியான விடையின் கீழ்க் கீறிடுக.

i.  உயர்திணைதன்மைபன்மைஎதிர்காலச் சொல்லுக்கு உதாரணம்

நடந்தேன்  வருவேன்  வந்தோம்  வந்தீர்கள்

ii. உயர்ந்த மனிதன் கனிந்த பழத்தை ருசித்து உண்டான் என்பதில் எழுவாய் அடைமொழி

கனிந்த    ருசித்து    மனிதன்   உயர்ந்த

iii.  பின்வருவனவற்றுள் மாற்றொலியன்

கடிதம்     பக்கம்     தங்கம்     உக்கிரம்

iv.  அணிலின் இளையது குஞ்சு போல சிங்கத்தின் இளையது

குருளை   குட்டி போதகம்   பறள்

v. யானை பிளிறும் என்பது போல பசு

கத்தும்     கதறும்    முக்காரமிடும்    உறுமும்

vi. சனத்துக்கு திரள் என்பது போல அறிஞருக்கு

அவை     அணி கூட்டம்    தொகுதி

vii. கப்பல் செலுத்துபவன்

வலவன்   விமானி   மீகாமன்   இடையன்

viii. இட்டுக் கெட்டார் எங்குமில்லை என்ற பழமொழி உணர்த்துவது

கெடுதி    கொடை   யாசகம்    கொடுத்தல்

ix. புராணக் கதைகளை சுவைபடச் சொல்வோன்

கதையாளன்     பேச்சாளன் அறிஞன்   பௌராணிகன்

x. ஒன்றன்பால் இறந்தகால வினைச்சொல்

வந்தன    ஓடின மேய்ந்தது  ஓடுகின்றுது05. பின்வரும் ஒவ்வொரு வினாவுக்குமுரிய ஒத்தகருத்துச் சொல்லைத் தெரிவு செய்க.

i. கல்வியின் அனுகூலம் பற்றி மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். இங்கு அனுகூலம் என்பது

பிரதிகூலம், தன்மை    நன்மை    தாத்பரியம்

ii. அவரது பேச்சு விந்தையிலும் விந்தை. இங்கு விந்தை என்பது

ஆச்சரியம் திகைப்பு   நகைச்சுவை     வேடிக்கை

iii. ஈசான மூலையிலிருந்து பலமான காற்று வீசியது. இங்கு ஈசான மூலை என்பது

வடகிழக்கு வடமேற்கு தென்கிழக்கு     தென்மேற்கு06.  பின்வரும் பந்திகளின் சாராம்சத்தை தனி வாக்கியத்தில் தருக.

i. கல்விப் போட்டி நிறைந்த உலகம் இது. இப்போட்டியில் வெல்வதற்காக மாணவர்களும் பெற்றோர்களும் பெரும்பாடுபட்டு வருகின்றனர். ஆதிகாலை முதல் இரவுவரை பிரத்தியேக வகுப்புகளும்பாடசாலைகளும் எனச்சென்று பல பிரயத்தனங்களை இவர்கள் எடுக்கின்றனர்.………………………………………………………………………………………………....................


ii. ஒரு நாட்டில் சேமிப்பு அதிகரிக்கும்போது அங்கு முதலீடு அதிகரிக்கும். இதன் மூலம் அரசு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும். இது தனிநபர் வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.………………………………………………………………………………………………....................


iii. பரந்து விரிந்த உலகம் சுருங்கி இன்று ஒரு குவலயக் கிராமமாகக் காட்சியளிக்கின்றது. கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்கிறோம். ஆனால் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் இன்று உலகம் கையளவு தகட்டுக்குள் அடக்கப்பட்டுள்ளது.………………………………………………………………………………………………....................
07. களுதாவளை மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் நீண்ட காலமாக செயற்பாடற்ற நிலையில் உள்ளது. எனவேஇக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தைப் புனரமைத்து கல்லூரியின் வளர்ச்சிக்கு பழைய மாணவர்களின் ஒத்துழைப்பை பெறவேண்டிய தேவைப்பாடு உள்ளது. இந்நிலையில் பழைய மாணவர்களை பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஒன்று கூட்டும் பொருட்டு தற்காலிக செயலாளர் பதவி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனக் கருதி பொதுக் கூட்டத்தை கூட்டும் கடிதமொன்று தயாரிக்குக.

08. வேலையில்லாப் பிரச்சினை நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளுள் ஒன்றாகும். இதனைப் போக்குவதற்கு நீர் வழங்கும் ஆலோசனைகள் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வரைக.

For Answers Click Here

No comments

Lanka Education. Powered by Blogger.