News

O/L - தமிழ் - சுருக்கம் எழுதுதல் - மொழித்திறன் வழிகாட்டல் - வினாக்கள்

சுருக்கம் எழுதுதல்


கவனிக்க வேண்டியவை
✅ வாசித்தல்
✅ கிரகித்தல்
✅ குறிப்பெடுத்தல்
✅ கருத்துக்களை ஒழுங்குபடக் கோர்த்தல்
✅ சுருக்கம் எழுதுதல்
✅ ஒப்பிட்டுப் பார்த்தல்
✅ சொல் எண்ணிக்கையைக் கணித்தல்

 சுருக்கத்திற்கான அடிப்படை படிமுறைகள்
✅ சொந்த வசன நடையில் எழுத வேண்டும்
✅உதாரணங்கள்உவமானங்கள்மேற்கோள்கள்வருனணைகள்அடைமொழிகள் என்பவற்றை முற்றாக நீக்குதல்
✅ ஒரே பந்தியில் சுருக்கம் எழுதுதல்
✅மூலப்பகுதியில் சொல்லப்படாத விடயங்களையும்சொந்தக் கருத்துக்களையும் எழுதுவதையும் தவிர்த்தல்
✅ மூலப்பகுதியில் உள்ள சொற்களைத் தேர்ந்தெடுத்து சுருக்கம் எழுதுவதைத் தவிர்த்தல்
✅ முதலில் பருமட்டான சுருக்கம் எழுதுதல்
✅ செய்யுள்கள் இடம்பெற்றால் அதன் பொழிப்பைச் சுருக்கி வசன நடையில் எழுதுதல்

பயிற்சிகள் 
1. பின்வரும் பந்திகளின் சாரம்சத்தை 10 - 12 சொற்களில் சுருக்கி எழுதுக.
A. உலகம் பாரிய சூழல் நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளது. மனிதச் செயற்பாடுகளே இந்தச் சூழல் நெருக்கடிகளுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. இதனால் உலகம் வெப்பமடைதல்துருவப் பகுதி பனிக்கட்டிகள் உருகுதல் போன்ற காரணங்களினால் கடல் மட்டம் உயர்ந்து வருகின்றது. இது கரையோர நிலம் அரிக்கப்பட வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.
2. இலங்கை பல பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. தைத்த ஆடைகள்தேயிலைஇறப்பர்தென்னை உற்பத்திகள்அலங்காரத் தாவரங்கள்பழங்கள் போன்றன அவையாகும். இவற்றின் மூலம் ஏராளமான வருமானம் கிடைக்கிறது. இதனைவிட வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் ஊடாகவும் பெருமளவு அந்நிய செலாவணி சம்பாதிக்கப்படுகின்றது.

3. இலங்கையில் விபத்துமரணங்கள் அதிகரித்துவருகின்றன. நாளாந்தம் விபத்தினால் மரணமடைவோர் தொடர்பான தகவல்கள் ஊடகங்கள் மூலம் வந்து கொண்டிருக்கின்றன. வீதி சட்ட திட்டங்களை அனுசரிக்காமைஅதிக வேகம்சாரதிகளின் கவனயீனம்மது போதையில் வாகனம் செலுத்துதல்சாரதிகளுக்கு ஏற்படும் தூக்கம் போன்ற பல காரணங்கள் விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றன. இதனால் மனித வளம் வீணாக அழிவுக்குள்ளாகின்றது.

 2. பின்வரும் சொற்களை நெடுங்கணக்கு வரிசை ஒழுங்கின் படி எழுதுக.
தனியார்கடற்காற்றுநட்டஈடுஞாயிறுபயிற்சிசத்தியம்மனிதர்கள்யாத்திரைவாழ்க்கைரயில்டாம்பீகம்
3. பின்வரும் வினாக்களில் இருக்கும் சொற்களில் முதலெழுத்துக்களை நீக்கி புதியதொரு எழுத்தை இடுவதன் மூலம் அவற்றின் எதிர்க்கருத்துச் சொற்களை உருவாக்குக
1. இரகசியம்
2. எழுதல்
3. உருவம்
4. இன்சொல்
5. குறைவு
6.  நாடு
7.  தள்ளுதல்
8. சுருக்கம்
9. உம்பர்
10. இயற்கை

4. பின்வரும் சொற்களில் பிழையான சொற்களை இனங்காண்க
காற்றாடிஅவதாரம்செலவாணிதவிசாளர்துர்க்குனம்பஞ்சதந்திரம்பற்றாக்குரைஉந்துருழிஉலங்குவானூர்திமுற்செடி
5. பின்வரும் விடயம் தொடர்பாக கடிதம் ஒன்று வரைக
குச்சவெளி வரையறுக்கப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு முகாமைத்துவ உதவியாளர் ஆட்சேர்ப்பு தொடர்பாக 2018.03.19 ஆம் திகதிய தினக்குரல் பத்திரிகை மூலம்அனுபவங்கள்வேறு தகைமைகள் என்பவற்றைக் குறிப்பிட்டு அப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பக் கடிதமொன்று தயாரிக்குக.
6. பின்வரும் வாக்கியங்களில் உள்ள பிழைகளை திருத்தி எழுதுக.
1. பறவைக் கூட்டம் அழகாக பறந்து சென்றன
2. அந்த மரத்திலுள்ள ஒவ்வொரு பழங்களும் சுவையானவை
3. குழந்தை தேம்பி தேம்பி அழுதது.
4. நானும்அம்மாவும்அப்பாவும் வந்தனர்.
5. இரண்டு கண்ணும் சிவந்தது.

1 comment:

Lanka Education. Powered by Blogger.