பாதுகாப்பான கற்றல் முறையினை தரும் ஒன்லைன் கல்வி
இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற வரப்பிரசாதங்களில் computer மற்றும் smart phones முக்கியமானவை. இச் சாதனங்களின் அபரித வளர்ச்சியின் வெளிப்பாடு இணையம். இணையம் எனும் “ஒன்லைன்” மூலம் இன்று உலகம் ஒடுங்கி ஒரு கூட்டுக்குள் வந்துள்ளது என்றால் மிகையாகாது. காய்கறி விற்பனை முதல் கப்பல் வியாபாரம் வரை அனைத்தையும் ஒன்லைன் ஆக்கிரமித்துள்ளது.
இலங்கையில் கல்வித்துறையில் முனோடியாக ”learneasy.lk” இணையம் விளங்குகிறது. இன்று இணையத்தை பயன்படுத்தாத எத்துறையும் இல்லை எனலாம். வர்த்தகத் துறையில் இணையத்தின் பயன்பாட்டினால் உலகப் பொருளாதாரம் வெகுவேகமாக முன்னேறி வருகிறது. அவ்வாறே கல்வித் துறையில் வகுப்பறைக் கற்பித்தல் முதல் நிர்வாகம் வரையில் அனைத்து செயல்பாடுகளிலும் கணினியின் பயன்பாடு தவிர்க்கமுடியாத்து. மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைவதற்கும், ஆசிரியரின் கற்பித்தல் திறன் அதிகரிக்கவும் கணினி இன்றியமையாதது. இதனைச் சரிவரப் புரிந்துகொண்ட ”learneasy.lk” நிறுவனம் மாணவர்களையும், ஆசிரியர்களையும் இணைக்கும் பாலமாக செயற்படுகிறது.
”learneasy.lk”யில் மாணவர்களுக்குத் தேவையான பல பாடங்கள் “ஒன்லைன்” இல் நடைபெறுகின்றது. முக்கியமாக ஆங்கில மொழி மூலம் கற்றலை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு சிறந்த கற்பித்தலை “ஆங்கிலத்திலேயே” மேற்கொள்ளகூடிய ஆசிரியர் வளம் எமது மாகாணத்தில் பற்றாக்குறையாகவே உள்ளமை வருந்ததக்கது. இதனால் ஆங்கில மொழி மூலம் கற்றலை மேற்கொள்ளும் மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதற்கு சிறப்பான தீர்வாக ஆங்கில மொழி மூல மாணவர்கள் முற்று முழுதாகவே ஆங்கிலத்தில் கற்றலை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பினை “learneasy.lk"ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. முற்று முழுதாகவே ஆங்கிலத்தில் கற்பிக்கக்கூடிய திறமையான ஆசிரியர்கள் learneasy இல் உள்ளனர். இது மாணவர்களின் பாடக் குறிப்புகள் பற்றிய இலகுவான புரிதலுக்கு வழி அமைப்பதுடன், பரீட்சைகளிலும் அதிக மதிப்பெண் பெற்றுக்கொள்வதற்கும் உறுதுணையாக இருக்கும்.
கலிபோர்னியா லூதான் பல்கலைக் கழகத்தினர் வகுப்பறைக் கற்றல் கற்பித்தலை திறன் பட மேம்படுத்த உதவும் கல்வி தொழில்நுட்ப முறைகளைப் பற்றி ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வு முடிவில் இணைய வழி அணுகு முறையால் ஆசிரியர்கள் பல புதிய தகவல்களுடன் மேற்கொண்ட கற்பித்தலையும், மாணவர்கள் கூடுதலான கற்றல் அடைவுகளைப் பெற்றதையும் கண்டறிந்தனர். தகுந்த படங்களையும் இணைத்து ஒளி, ஒலியுடன் கற்பித்ததால் ஆசிரியர்கள் தமது கற்பித்தல் திறன் மேம்பட்டதுடன், மாணாக்கர்களின் கற்றல் அடைவு மட்டம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே ஒன்லைன் அணுகு முறையில் சமூக அறிவியலைக் கற்பித்தலால் மாணாக்கர்களின் கற்றல் அடைவு மேம்படும் என்பதில் ஐயமில்லை.மாணவரின் கலவித்தரத்தை உயர்த்துவதற்கு ”learneasy.lk” தயாராக இருக்கிறது. ஒன்லைன் வழிக் கற்பித்தலில் கல்வி கற்பது இளைஞர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற கருத்து உள்ளது. வயது ஒரு பொருட்டல்ல. சிறியவரோ முதியவரோ தற்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தெரிந்துகொண்டால் ஒன்லைன் எனப்படும் இணையவழிக் கல்வி எல்லோருக்கும் சாத்தியமே. அதே நேரம் வகுப்புகளிற்கு சென்று கற்றலை மேற்கொள்ளமுடியாமல் இருக்கும் வீட்டுப்பெண்கள், தொழில் புரிவோருக்கும் போன்றவர்களுக்கும் “ஒன்லைன்” கல்விமுறை உதவுகிறது.
ஆசிரியருக்கு பதிலாக தொழில்நுட்பம்தான், அடுத்த ஆசிரியர் என்னும் நிலை உருவாகிவிடும் எனும் குற்றச்சாட்டு உள்ளது. அது உண்மை அல்ல, ஆசிரியர்களுக்கு நிகர் யாரும் இல்லை. இதற்கு முன்னர் ஆசிரியர்கள்தான் அறிவின் களஞ்சியங்கள். ஆனால், வரும் காலத்தில் அவர்களுடைய பன்முகத் திறன், பாடத்திட்டம், வடிவமைப்பு, உள்ளடக்கம், அறிவைப் பகிர்கின்றவர் எனப் பல நிலைகளிலும் வெளிப்பட வேண்டும்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ”learneasy.lk” - யில் கற்கலாம் ”learneasy.lk” எனும் இணையதளம் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டுள்ளது. learneasy தொடர்பில் மேலதிக விபரம் அறிவதற்கு 76667-4945 தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொள்ளவும்.
No comments