News

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பம்

 




பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ள மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் அரசாங்கத்தின் செயற்றிட்டம் இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மக்கள் வங்கியின் அனுசரணையுடன் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக 3 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

80,000 ரூபா பெறுமதியான மடிக்கணிணி, இணையத்தள வசதி, மென்பொருள் தொகுதி வழங்கப்படுவதுடன், அவற்றுக்கு நான்கு வருட உத்தரவாதம் இருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மாணவர்கள் பல்கலைக்கழக காலப்பகுதியில் மாதாந்தம் 500 ரூபா செலுத்த வேண்டும் என்பதுடன், தொழில் பெற்றதன் பின்னர் எஞ்சியுள்ள தொகையை 6 வருடங்களில் செலுத்த முடியும்.

No comments

Lanka Education. Powered by Blogger.