News

பேராதனைப்பல்கலைக்கழகத்தைபார்வையிட அனுமதி பெறுவது எவ்வாறு என்று தெரியுமா?


 


பேராதனைப்பல்கலைக்கழகத்தைபார்வையிட அனுமதிபெறுவதுஎப்படி?

கண்டிக்கு சுற்றுலா வரும் பாடசாலை மாணவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தையும் சுற்றி பார்க்க ஆசைப்படுகின்றனர். அதற்கு என்ன செய்ய வேண்டும் ?என்று நாட்டின் பல இடங்களில் இருந்தும் அழைப்புகள் வருகின்றன. குறிப்பாக தமிழ் மொழிமூலமான பாடசாலைகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை தொடர்பான பதிவு இங்கே.

1). சுற்றுலா வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு  பல்கலைக்கழக Public Relations பிரிவுக்கு அனுமதிக்காக   Email மூலம் விண்ணப்பிக்க வேண்டும். (, மாதிரி விண்ணப்ப படிவம் இணைக்கபட்டுள்ளது)  சுற்றுலா தினம். இதில் நீங்கள் பார்க்க விரும்பும் இடங்கள்  போன்றவற்றை குறிப்பிட முடியும்.


2). விண்ணப்பித்த பின்னர் ஏதாவது காரணங்களால் அனுமதி கிடைக்க தாமதம் ஏற்படுமாயின் குறித்த பிரிவின் தொலைபேசிக்கோ. FAX க்கோ தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். (இலக்கங்கள்   Letter head ல் உண்டு)


3). அனுமதிக்கடிதம் Email ஊடாக கிடைத்தால் பல்கலைக்கழகத்திற்குள் உள்நுளையும் போது Hardcopy உங்களிடம் இருப்பது சிறந்தது. 


4). பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப்  பின்பற்றி அனுமதிக்கப்பட்ட இடங்களைப்  பார்வையிட முடியும். 


5) University Library ஐப் பார்வையிடுவதாயின் பகல் 12- 01 மணி வரையுமே அனுமதி வழங்கப்படுகிறது. 


6)பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சந்திப்பு மற்றும் விசேட விரிவுரைகள் மாணவர்களுக்கு அவசியமாயின் முன்கூட்டியே அவர்களுடன் தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.


07) குறித்த சுற்றுலாவுக்கு பொறுப்பான பாடசாலை அதிபரோ. ஆசிரியர்களோ. மாணவர்களை பாடசாலை சீருடையில் அழைத்து வந்து. மாணவர்கள் பல்கலைக்கழக சூழலுக்கு எதுவித சேதத்தை யும்  ஏற்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும். 


இலங்கையின் முதலாவதும். முதல்தரமான பல்கலைக்கழகத்தை நீங்கள் பார்வையிடுவதற்கு முறையான அனுமதி பெற்றிருப்பீர்களாயின் அது உங்கள் பயணத்தை இலகுவாக்கும். அனுமதியின்றி மாணவர்கள்  எவரும் உள் நுழைய முடியாது. 

பல்கலைக்கழக வெப்சைட்...www.pdn.ac.lk

அனுமதிக்காக அனுப்ப வேண்டிய Email  pro@gs.ac.lk.

முபிஸால் அபூபக்கர்.
சிரேஷ்ட விரிவுரையாளர்.
மெய்யியல் துறை 
பேராதனைப் பல்கலைக்கழகம்

No comments

Lanka Education. Powered by Blogger.