News

SCHOLARSHIP EXAM போது பெற்றோர்கள் பிள்ளையுடன் நடந்துகொள்ள வேண்டிய சில வழிமுறைகள்


 

SCHOLARSHIP EXAM

அன்பின் பெற்றார்களே!

பரீட்சை அண்மிக்கும் போது பெற்றோர்கள் பிள்ளையுடன் நடந்துகொள்ள வேண்டிய சில வழிமுறைகளை உங்கள் கவனத்திற்கு தருகின்றோம். 
அவற்றை பின்பற்றி பிள்ளையின் உள உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஊக்கமும் உற்சாகமும் வழங்கி பரீட்சைக்கு தைரியமாக முகம் கொடுக்க வழிகாட்டலாம். 


😌அமைதியாக பேசுங்கள்.
▪️பிள்ளையுடன் பேசும் போது அவசரப்படாமல் அமைதியாக பேசுங்கள். 
▪️பிள்ளைக்கும் பேசுவதற்கு இடம் கொடுங்கள். 
▪️செவிமடுக்கப்படுவதை பிள்ளைக்கு உணர்த்துங்கள். 


🗣️கோரிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
 
▪️நீ எப்படியோ சித்தியடைய வேண்டும் என்றோ, 
நீ சித்தியடைவது தான் எங்கள் எதிர்பார்ப்பு என்றோ அல்லது சித்தியடைய வேண்டும் என்பதற்காக ஏதாவது முறையில் வேண்டுகோள்கள் மற்றும் அழுத்தங்கள் கொடுப்பது நல்லதல்ல. 

🙇🏽‍♀️🙇‍♂️ பரீட்சை அண்மிக்கும் போது நீண்ட நேரத்தை படிப்பில் செலவிடுவதை குறைத்து பிள்ளை ஓய்வாக இருப்பதற்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது.


🧓🏼மனச்சோர்வை புரிந்துகொள்ளுங்கள்..

பிள்ளை மனச்சோர்வாக இருக்கக் காணும் போது அதை புரிந்துகொண்டு அவசரப்பட்டு பொருத்தமற்ற எதனையும் சொல்லிவிடாமல்… ....
▪️பிள்ளை செய்வது அதற்குப் போதுமானது என்பதை தெரியப்படுத்துங்கள். 
▪️மற்றவர்களுடன் போட்டியிடுவதற்காக நீங்கள் படிப்பதில்லை. உங்கள் திறமையை வெளிப்படுத்தவும் அதை காணவுமே படிக்கிறீர்கள் என்று எடுத்துக்கூறுங்கள். 


🙋‍♀️நேர்மறையான சுய எண்ணங்களை உருவாக்க உதவுங்கள்.
உதாரணமாக..... 
🧏🏼‍♂️நான் புத்திசாலி..
👩🏼‍🎓இந்தப் பரீட்சையில் நான் சிறப்பாக செயற்படுவேன்.. 
🤵🏼நான் படித்திருக்கிறேன்.. 
👨🏼‍⚕️எனக்கு பதில்கள் தெரியும்.. 
👨‍⚖️என்னால் தைரியமாக பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியும்..
என்று சொல்லுமாறு சொல்லிக்கொடுங்கள். 


😀உங்கள் நல்ல சிந்தனையால் மட்டுமே நீங்கள் வெற்றியாளராக ஆகுவீர். அதனால் 
💪என்னால் முடியும்...!
💪நான் சாதிப்பேன்..!
என்ற எண்ணங்களை மனதிற்கு கொண்டுவருமாறு எடுத்துக்கூறலாம். 


😵ஒப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

🤫பிள்ளையை மற்றப்பிள்ளையோடு ஒப்பிடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுங்கள். 🤭பிள்ளைக்கும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டாம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். 
😕மற்றப்பிள்ளைகள் எப்படிச்செய்வார்கள் என்று எண்ணுவதை விட்டு, உங்கள் திறன்கள் மீது அவதானம் செலுத்துங்கள் என்றும் சொல்லிக்கொடுங்கள்.  


🤦🏼‍♂️கவலைப்படத் தேவையில்லை என்பதை உணர்த்துங்கள்..
😔உங்களை பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. 
நீங்கள் எதிர்பார்த்த அளவு அதிகம் செய்ய முடியாவிட்டால் நீங்கள் உங்களையே சங்கடப்படுத்திக்கொள்ள வேண்டியதுமில்லை. 
ஆனால் இப்போது கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்களால் முடிந்தவரை முழுமையாகச் செய்ய முயற்சியுங்கள் என்று கூறுங்கள்.


😑😐உறக்கமும் ஓய்வும்

இக்காலத்தில் பிள்ளைக்கு உறக்கமும் ஓய்வும் கட்டாயம் தேவை. பூரணமான உறக்கத்திற்கு நேரத்தை ஒதுக்கிக்கொடுங்கள். 
பிள்ளைக்கு 7-8 மணித்தியாலம் உறக்கம் அவசியமாகும். 
அழகாக ஆரோக்கியமாக உறங்கினால் அடுத்த நாளில் உடலும் உள்ளமும் சுறுசுறுப்பாக இயங்கும் என்பதை இரவில் நினைவு படுத்துங்கள். 

🥘🥙உறக்கம் போன்று பூரணமான போசணையுள்ள உணவும் பிள்ளைக்குத் தேவை. போசணை உணவு உடல் வளர்ச்சிக்கு மட்டுமன்றி சிந்தனை வளர்ச்சிக்கும் கட்டாயம் தேவைப்படுகிறது என்பதை சொல்லிக்கொடுத்து உணவு உட்கொள்ள பழக்குங்கள். 

👨‍👧‍👦பிள்ளையின் தலை தடவி பிரார்த்தியுங்கள். அது பிள்ளைக்கு நம்பிக்கையை கொடுக்கும்.

No comments

Lanka Education. Powered by Blogger.